32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

‘சைந்தவ்’  திரைப்படத்தின்  கதாபாத்திர  அறிமுக  காணொளி  வெளியீடு

Inbaaraja சேலம் Published: 15/08/2023 2 நிமிட வாசிப்பு Updated: 22/08/2023 சினிமா
எழுத்து அளவு:

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் 75வது படமாக உருவாகி வரும்  திரைப்படம் “சைந்தவ்”. இப்படத்தை Hit  Series திரைப்படங்களை இயக்கிய சைலேஷ் கொலனு இயக்குகிறார்.  வெங்கட் போயனப் பள்ளி மற்றும் நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் உச்ச கட்ட காட்சியை எட்டு முக்கியமான நடிகர்கள் பங்கேற்க படப்பிடிப்பு நடத்தி முடித்திருப்பதாக தகவல்கள் சமீபத்தில் வெளியானது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அதைத் தொடர்ந்து இன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு “சைந்தவ்” படக்குழுவினர் ஒரு காணொலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக விளங்கும் வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா,  ருஹானி சர்மா, சாரா, ஜெயப்பிரகாஷ் ஆகிய எட்டு பேரும் ஒரு பாலத்தில் இரவு நேரத்தில் நடந்து வருவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.  திரைப்படத்தில் இந்த எட்டு பேரைச் சுற்றித் தான் கதை நகர்வு இருப்பதால், இந்த எட்டு கதாபாத்திரத்தையும் இந்த காணொலியின் மூலமாக அறிமுகப்படுத்தியுள்ளது படக்குழு.

 

மேலும் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகும் 75வது படம் என்பதோடு, இது ஒரு பான் இந்தியா திரைப்படமாகவும் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

எஸ். மணிகண்டன்  ஒளிப்பதிவு  செய்யும்  இந்த  திரைப்படத்திற்கு  சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.  கேரி  பி.  ஹெச். படத் தொகுப்பாளராக  பணியாற்ற,  அவினாஷ்  கொல்லா  தயாரிப்பு வடிவமைப்பாளராகவும்,  கிஷோர் தல்லூர் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

இந்த  திரைப்படம்  தமிழ்,  தெலுங்கு,  மலையாளம்,  கன்னடம்,  இந்தி  ஆகிய இந்திய  மொழிகளில்  டிசம்பர் 22ஆம்  தேதியன்று  கிறிஸ்மஸ்  விருந்தாக வெளியாகிறது.

https://youtu.be/f-nAUgRWByk

Inbaaraja
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.