
“இந்தப் படத்தில், ஒரு காட்சியில் நடிக்கும் போது சாயிஷா அளித்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. மைனஸ் 9 டிகிரி குளிரில் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, குளிர் தாங்க முடியாமல் தவித்தார். அவரது உதடுகள் நீலநிறமாக மாறியது. அவரது அம்மா பதறினார். நாங்களும் உடனே மருத்துவ உதவிக்காக அவரை அனுப்பி வைத்தோம். ஆனால் அந்தக் கார் திரும்பவும் படப்பிடிப்புத் தளத்திற்கே வந்தது. இன்னும் சில ஷாட்கள் தான் மீதமிருக்கிறது. அதை நடித்து விட்டு மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்கிறேன் என்றார். இதை என்னால் மறக்க முடியாது” என நெகிழ்ந்தார் ஜுங்கா படத்தின் இயக்குநர் கோகுல்.
படத்தின் நடித்த அனுபவத்தைப் பற்றி சாயிஷா பகிர்ந்த போது, “இப்போது தான் தமிழ் பேசுவதற்குக் கற்றுக் கொண்டு வருகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன். வெளிநாட்டில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி சார், இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், ஒளிப்பதிவாளர் டட்லீ ஆகியோரின் உதவி மறக்க முடியாது” என்றார்.