Shadow

ஜுங்கா என்றால் என்ன? – விஜய் சேதுபதி

Junga movie still

விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, “இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரேமாதிரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. இந்தப் படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில் தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்ற விசயங்களைப் பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம்.

இதில் பஞ்ச் இருக்கா? இல்லையா? என்று என்னிடம் கேட்பதை விட, அதை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள். நாங்கள் அதனை டயலாக்காகத்தான் பேசுகிறோம்.

ஜுங்கா என்றால் என்ன? என்பதை படத்தில் ஒரு காட்சியாகவே வைத்திருக்கிறோம். அதனால் இப்போது அதைப் பற்றி விரிவாக சொல்லமுடியாது.

இந்தப் படத்தில் நடிக்கும் டான் கேரக்டருக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது.

படத்தில் என்னுடன் யோகி பாபு நடித்திருக்கிறார். அவருடைய ஒன்லைன் பஞ்ச் என்னோட ஃபேவரைட். எந்தச் சூழலாக இருந்தாலும் அதனை எளிதாக கையாளக்கூடியத் திறமையை நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறார்” என்றார்.

படத்தின் இயக்குநர் கோகுல், “இந்தப் படத்தில் பிரம்மாண்டமாக காமெடி இருக்கிறது. ஆக்ஷனும் பிரம்மாண்டமாக இருக்கும். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் யூத் ஆடியன்ஸ்க்காக எடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஜுங்கா ஆல் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.