Shadow

மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’

Maanaadu-begins-at-Malaysiaஅமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தைத் தயாரித்துள்ளது. விரைவில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், இதையெடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.ஜா

கதாநாயகியாக பிரபல இயக்குநரான பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்க இருக்கிறார். இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இடம்பெறுகின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப் படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆனதால், படம் அவ்வளவுதான், டைட்டில் அறிவிப்போடு கைவிடப்பட்டது என்றெல்லாம் சில செய்திகளைப் பரப்பி வந்தனர். ஆனால் படப்பிடிப்பை துவங்குவதற்கான பக்காவான முன்கட்ட தயாரிப்புப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்ததை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.

அவர்களின் நினைப்பை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக, வரும் ஜூன்-25ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. பாடலுடன் சில முக்கியமான காட்சிகளும் மலேசியாவில் படமாக்கப்பட உள்ளன.