Shadow

இனிதே நடந்த முடிந்த “சைரன்” பட இயக்குநரின் திருமணம்

‘சைரன்’ படத்தின் இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் – ரம்யா திருமணம் இனிதே நடைபெற்றது.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற ‘சைரன்’ படத்தை இயக்கிய இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் – ரம்யா திருமணம், கடந்த ஞாயிற்றுகிழமை (19.5.2024) அன்று இனிதே நடைபெற்றது.

அன்று மாலை கோவிலம்பாக்கத்தில் உள்ள PR பேலஸில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்…

நடிகர் ஜெயம் ரவி, அவரின் மனைவி ஆர்த்தி ரவி, நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி,  தயாரிப்பாளரும் எடிட்டருமான மோகன், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார், இயக்குநர் சிறுத்தை சிவா, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், நடிகர் சதீஷ், நடிகரும் இயக்குநருமான அழகம்பெருமாள், எடிட்டர் ரூபன்,  இன்று நேற்று நாளை ரவிக்குமார், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இயக்குநர் விருமாண்டி, இயக்குநர் எம்.ஆர்.மாதவன், இயக்குநர் கிஷோர் ராஜ்குமார், நடன இயக்குநர் பாபி மாஸ்டர், இயக்குநர் சவரி முத்து, இயக்குநர் சண்முகம் முத்துச்சாமி,  ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சரவணன், கலை இயக்குநர் சக்தி, நடிகை சாந்தினி, பாடலாசிரியர் சினேகன், அவரின் மனைவி கன்னிகா சினேகன், பாடலாசிரியர் முருகன் மந்திரம், ஒளிப்பதிவாளர் தினேஷ் பி.கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே, கலை இயக்குநர் கதிர் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.