
“அக்கரன்” திரைப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் எம்.எஸ்.பாஸ்கர்
குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் K பிரசாத் இயக்கத்தில், எம் எஸ் பாஸ்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, மாறுபட்ட களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் "அக்கரன்". விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்வினில்நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது..
இப்படத்தைத் தயாரித்திருக்கும் கார்த்திகேயனுக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள். ஹரி இசையில் பாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது. சரவெடி சரவணன் மாஸ்டர் ரொம்ப ஈஸியாக சொல்லிக்கொடுத்து ஆக்சன் காட்சிகளை எடுத்து விடுவார் ஆக்சன் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. இந்தப்படத்திற்கு என் அக்கா மகன் மது வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்க தான் லீட் கேரக்டர் செய்யனும் என்றார். சரிப்ப...