Shadow

Tag: அரவிந்த் ஸ்வாமி

தி லயன் கிங் விமர்சனம்

தி லயன் கிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
1994 இல் வெளியான 'தி லயன் கிங்' படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்கள், சில வருடங்களிலேயே தாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். டிஸ்னி ஸ்டியோஸின் வரலாற்றிலேயே, இப்படம் ஒரு மைல்கல். இப்படத்தைப் பார்த்த அத்தனை பேரையுமே, இசையால், அனிமேஷனால், 'ஹகுனா மடாடா (எதற்கும் கவலைப்படாதே)' எனும் உயரிய சித்தாந்தாத்தாலும் கொள்ளை கொண்டது. அந்தப் படத்தை நினைத்தாலே ஒரு மகிழ்ச்சியான சிலிர்ப்பு ஏற்படும். சரியாக 25 ஆண்டுகளுக்குப் பின், அப்படம் 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. 2016 இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தி ஜங்கிள் புக் குதூகலத்தில், டிஸ்னி இப்படத்தைப் பிரம்மாண்டமாய்த் தயாரித்து வெளியிடுகிறது. அதுவும் 'டிஸ்னி இந்தியா', நேரடியாகத் தமிழிலேயே 'டப்' செய்து வெளியிட்டிருப்பது மேலும் சிறப்பு. வில்லன் சிங்கம், ராஜா சிங்கத்தைக் கொன்று, குட்டி சிங்கத்தையும் கொல்...
தி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள்

தி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் - ஆக்ஷன் படமான 'தி லயன் கிங்' படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி இந்தியா நிறுவனம். தி லயன் கிங் படத்தின் தமிழ்ப் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த், ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுடன் உரையாடினர். “1994 ஆம் ஆண்டு, 2டி அனிமேஷனில் வெளியான திரைப்படத்தின் புதிய பதிப்பு தான் 'தி லயன் கிங்'. எங்கள் டிஸ்னி நிறுவனத்துக்கு இது ஒரு ஸ்பெஷலான படம். இது குடும்ப உணர்வுகளைப் பேசும் படம். கதை சொல்லும் விதம் தனித்துவமாக இருக்கும். தந்தை, மகன் பாசம் தான் படத்தின் கரு. இந்திய மக்கள் பார்த்து மகிழ அவரவர் மொழிகளில் திரைப்படத்தை வெளியிடும் முய...
தனி ஒருவன் விமர்சனம்

தனி ஒருவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நல்லவனும் ஒரு கெட்டவனும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம்தான் தனி ஒருவன் படத்தின் கதை. ஐ.பி.எஸ். அதிகாரி மித்ரனாக ஜெயம் ரவி. குற்றங்களைக் கண்டு பொங்கிடும் நல்லவர்; கல்வி கேள்விகளில் வல்லவர்; 24 மணி நேரமும் குற்றங்களைத் தேடியும், அதைப் பற்றியுமே யோசிப்பவர். அதைத் தடுப்பதற்காகவே ஐ.பி.எஸ்.சில் சேருகிறார். மிகச் சிறிய வயதிலேயே குற்றங்களையும், அந்தக் குற்றத்துக்கான காரணங்களையும் செய்தித் தாள்களிலேயே கண்டடையும் தனித் திறமை மிக்கவராகத் தன்னை உருவாக்கிக் கொள்கிறார். நாளடைவில் செய்தித் தாளில் வரும் செய்திகளுக்குப் பின்னால் வேறு உண்மை இருக்கக்கூடும் என்ற புரிதலும், ஒவ்வொரு பெரிய குற்றத்துக்கும் முன் ஒரு சிறு குற்றமிருக்கும் என்ற உண்மையும் அவருக்குப் புரிய வருகிறது. ஆக, 100 குற்றவாளிகளை உருவாக்கும் ஒரே ஒரு பெரிய குற்றவாளியைப் பிடிப்பதுதான் அவர் வாழ்வின் ஒரே லட்சியம். சிந்தாமல் சிதறாமல், சிறு சந்தர்ப்பத...