ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்
1965 இல் வெளியான ஒரு படம் இன்றைய ரசிகர்களுக்குப் பிடிக்குமா?
இன்னும் 50 வருடங்களுக்குப் பின் வெளியானாலும் கண்டிப்பாக பிடிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் எவர்-க்ரீன் என்ட்டர்டெயினர்களில் இப்படமும் ஒன்று.
நெய்தல் நாட்டு மருத்துவர் மணிமாறனையும் அவருடன் பலரையும், அந்நாட்டு கொடுங்கோல் சர்வாதிகாரி கன்னித் தீவில் அடிமைகளாக விற்றுவிடுகிறார். மணிமாறனும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி நெய்தல் நாட்டு சர்வதிகாரியை எதிர்த்து வெற்றி பெற்றனரா என்பதுதான் படத்தின் கதை.
சர்வதிகாரம், அடிமைகளைக் கொடுமைப்படுத்தி வேலை வாங்குதல், கொள்ளை, போர் என படம் நீண்டாலும்.. சுபமாய் முடிகிறது. கருப்பு எம்.ஜி.ஆர். போல தமிழ் தெரியாதவர்களிடமும் பேசியே திருத்தி விடவில்லை வாத்யார். அனைவரிடமும் இரக்கத்தைக் காட்டி, எதற்கும் வன்முறை தீர்வில்லை என்ற அணுகுமுறையால் அனைவராலும் ஏகமனதாக தலைவராக ஏற்ற...