Shadow

Tag: ஆர்.எம்.வீரப்பன்

ஆர்.எம். வீரப்பன் | டி.ராஜேந்தரின் இரங்கல் கடிதம்

ஆர்.எம். வீரப்பன் | டி.ராஜேந்தரின் இரங்கல் கடிதம்

சினிமா, திரைச் செய்தி
மறைந்து விட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய ஒப்பற்ற உதவியாளராக, சரித்திரம் படைத்த சத்யா மூவிஸ் நிறுவனத்தின் சாதனை படைத்த தயாரிப்பாளராக, பல்வேறு காலகட்டங்களில் அரசியல் களத்தில் போராட்ட வீரராக, அண்ணா திமுகவின் முன்னாள் அரும்பெரும் செயலாளராக, முன்னாள் அமைச்சராக ஒய்வின்றிப் பணியாற்றிய ஆருயிர் அண்ணன் ஆர்.எம்.விரப்பன் அய்யா அவர்களின் மறைவு மனதிற்குப் பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய இழப்பு தமிழ் நல்லுலகிற்கே பெரும் இழப்பாகும். அமரராகிவிட்ட அய்யாவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். இப்படிக்கு, டி. ராஜேந்தர் M.A, தலைவர், இலட்சிய திமுக, தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் கௌரவ ஆலோசகர், தமிழ்...
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரின் ரிக்‌ஷாக்காரன்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரின் ரிக்‌ஷாக்காரன்

சினிமா, திரைத் துளி
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த 'ரிக்‌ஷாக்காரன்' திரைப்படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பல விதங்களில் ஸ்பெஷலானது. ஆர்.எம்.வீரப்பன் தனது சத்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து எடுத்த ஐந்தாவது படம் இது. சிறப்பான கதையம்சமும், இனிமையான பாடல்களும், எம்.ஜி.ஆர் அவர்களின் ஸ்டைலான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து, 1971 ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே 'ரிக்‌ஷாக்காரன்' திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்தப் படத்தில் மூலம் தான் மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அசோகன், மேஜர் சுந்தரராஜன், மனோகர், தேங்காய் சீனிவாசன், சோ, பத்மினி என்று படத்தில் நட்சத்திரப் பட்டாளம் இருப்பது மட்டுமல்ல, அவர்களது கதாபத்திரங்களும் சிறப்பாக அமைந்து நவரசங்களை வெளிப்படுத்தின. "அங்கே சிரிப்பவர்கள்...