“படங்கள் பார்த்தேன்; இயக்குநர் ஆனேன்” – திரி இயக்குநர்
திரி கல்வியை மையப்படுத்திய யதார்த்தமான ஒரு கமர்ஷியல் படம்.
“தியேட்டரில் நான் 465 படங்களை பார்த்து விட்டு தான் படம் இயக்கவே வந்தேன். ஒரு ரசிகனாய் நான் பல படங்களை விமர்சித்திருக்கிறேன். அதனால் என்ன பண்ணலாம் பண்ணக்கூடாதுன்னு தெரிந்து கொண்டேன். நிச்சயம் என் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும். திரி என்றால் இளைஞர்களைத் தூண்டி விடுதல் என்ற பொருளில் தலைப்பு வச்சிருக்கேன். சினிமாவால் தான் சமுதாயம் கெட்டுப் போகுது. நல்ல கருத்துகளையே அவைச் சொல்வதில்லை என்றொரு கம்ப்ளெயின்ட் இருக்கு. நான் நல்ல கருத்துகளைச் சொல்லியுள்ளேன். ‘துருவங்கள் 16, மாநகரம் போல படங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் யதார்த்தமான கமர்ஷியல் படமா?’ என்று நினைக்க வேண்டாம். என் நண்பர்கள் தான் எனக்கு உறுதுணையாய் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்றார் இயக்குநர் அசோக் அமிர்தராஜ்.
சீ ஷோர் கோல்டு புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆ....