Shadow

Tag: இயக்குநர் சாய்.K

“என்னுடைய அப்பா சூப்பர் ஹீரோ” – கீர்த்தி பாண்டியன் | அஃகேனம்

“என்னுடைய அப்பா சூப்பர் ஹீரோ” – கீர்த்தி பாண்டியன் | அஃகேனம்

சினிமா, திரைச் செய்தி
A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் 'அஃகேனம்' எனும் திரைப்படம், ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் உதய்.K, ''இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரமாகட்டும், அல்லது, இனி என்‌ இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களிலாகட்டும், பெண் கதாபாத்திரம் வலிமையாக இருக்கும். இதற்கு என் அம்மா தான் காரணம். அம்மாவிற்கு அடுத்ததாகத் தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு நான் நன்றி சொல்கிறேன். என்னை நம்பி என்னுடைய ஒட்டுமொத்த குழுவிற்கு வாய்ப்பளித்திருக்கிறார். இதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும். அவர் நினைத்தால் ஒரு ஃபோன் காலில் யாரை வேண்டுமானாலும் அழைத்துப் பணியாற்றச் ...