Shadow

Tag: இயக்குநர் ஸ்ரீசெந்தில்

காளிதாஸ் விமர்சனம்

காளிதாஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
  காளிதாஸ் நல்ல சைக்காலஜிகல் த்ரில்லர் படம். பரத்துக்கு இந்த படம் நல்லதொரு கம்பேக்காக அமையும். அடிக்கடி மர்மமான முறையில் பெண்கள் இறந்து போகிறார்கள். அவை தற்கொலைகள் என்றும், அதற்குக் காரணம் ப்ளூவேல் கேம்தான் என பரத் நினைக்கிறார். பரத்தால் இந்த வழக்கை முடிக்க முடியாததால் சுரேஷ் மேனன் அவ்வழக்கைத் துப்பு துலக்க வருகிறார். இருவரும் சேர்ந்து அது கொலையா தற்கொலையா எனக் கண்டுபிடிப்பதுதான் கதை. இது போக, பரத் வீட்டுக்கே வராமல் போலீஸ் வேலையிலையே பிசியாக இருப்பதால் அவரது மனைவி, வீட்டு மாடியில் வாடைகைக்குக் குடியிருக்கும் ஆதவ் கண்ணதாசன் மீது காதல் கொள்கிறார். அதனால் அவருக்கு என்ன ஆச்சு என்பதுதான் செம க்ளைமேக்ஸ் ட்விஸ்ட். இதில் மிகுந்த சுவாரசியமான விஷயம், சுரேஷ் மேனனுக்கும் பரத்துக்கும் உள்ள உறவு. இப்படி ஒரு மேலதிகாரியும் இருப்பாரா என்று பார்வையாளர்களுக்குத் தோன்றும். பரத்துக்கு ஆலோசனை செய்வதாகட...
முதல் முறையாகப் போலீஸ் வேடத்தில் பரத்

முதல் முறையாகப் போலீஸ் வேடத்தில் பரத்

சினிமா, திரைத் துளி
லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீஸன் ஒன்றில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாளராகக் கலந்து கொண்டவர்கள் ரெமோ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் குரங்கு பொம்மை  இயக்குநர் நித்திலன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவைக் கவனிக்கிறார் சுரேஷ் பாலா. இவர் பிரபல ஒளிப்பதிவாளர்களான வேல்ராஜ் மற்றும் பாலசுப்ரமணியெம் ஆகியோர்களிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். படத்தை...