32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

முதல் முறையாகப் போலீஸ் வேடத்தில் பரத்

Dinesh R சேலம் Published: 30/09/2017 1 நிமிட வாசிப்பு Updated: 12/11/2017 சினிமா
எழுத்து அளவு:

Director Sri Senthil Kumar's new film

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவர் நாளைய இயக்குநர் சீஸன் ஒன்றில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாளராகக் கலந்து கொண்டவர்கள் ரெமோ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் குரங்கு பொம்மை  இயக்குநர் நித்திலன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவைக் கவனிக்கிறார் சுரேஷ் பாலா. இவர் பிரபல ஒளிப்பதிவாளர்களான வேல்ராஜ் மற்றும் பாலசுப்ரமணியெம் ஆகியோர்களிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

படத்தைப் பற்றி அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசும் போது, “சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடன் கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாயகி கேரக்டரில் நடிப்பதற்காக முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு விஜயதசமி (அக்டோபர் 30) முதல் தொடங்குகிறது” என்றார்.

“இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை தீபாவளியன்று வெளியிடப்படும்” என்று தயாரிப்பாளர்களில் ஒருவரான M.S. சிவநேசன் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.