Shadow

Tag: இயக்குநர் VJ கோபிநாத்

“22 நாட்களில் எடுக்கப்பட்டது ஜீவி 2” – இயக்குநர் V.J.கோபிநாத்

“22 நாட்களில் எடுக்கப்பட்டது ஜீவி 2” – இயக்குநர் V.J.கோபிநாத்

சினிமா, திரைச் செய்தி
கடந்த 2019இல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம் ‘ஜீவி’. யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரைப் போல நேர்த்தியாகப் படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குநர் V.J.கோபிநாத். இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜீவி 2’ என்கிற பெயரில் உருவாகிக் கடந்த ஆகஸ்ட் 19 இல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, கருணாகரன், ரமா உள்ளிட்ட அனைவரும் இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர் இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இந்த ‘ஜீவி 2’ உருவாக்கம் குறித்து சில புதிய தகவல்களை நம்மிடம் பகிர்...
இரண்டு நாட்களில் உருவான ‘ஜீவி 2’ கதை

இரண்டு நாட்களில் உருவான ‘ஜீவி 2’ கதை

சினிமா, திரைத் துளி
வெங்கட்பிரபு, சிம்பு கூட்டணியில் மாநாடு என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன், தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தைத் தயாரித்து வருகின்றது. அதே சமயம் இன்னொரு பக்கம் மாநாடு படத்திற்குப் பின் ஜீவி-2 என்கிற படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்து முடித்து விட்டது. கடந்த 2019இல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இயக்குநர் VJ கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது. "ஜீவி படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டிருந்தது. எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும் இன்னொரு இடத்தில் வேறு ஒருவருக்கு நடப்பதற்கு நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும். ...