Shadow

Tag: உலகக்கோப்பை 2019

மழையில் கரைந்த கனவு

மழையில் கரைந்த கனவு

சமூகம்
லீக் சுற்றில் முதலிடம் பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் முதலாவது அரையிறுதியில் மோதின. டாஸ் வென்ற வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப்புக்குப் பதில் சஹோல் சேர்க்கபட்டார். இலங்கைக்கு எதிரான முதல் போட்டியைத் தவிர, மற்ற ஆட்டங்களில் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்தப் போட்டியிலும் அது தொடர்ந்தது. ஆட்டத்தின் முதல் பந்தை புவனேஷ்வர் வீச, குப்தில் எதிர்கொண்டார். பந்து பேடில் பட, LBW கேட்டனர். களநடுவர் மறுக்க, இந்தியா DRS கேட்டது, ரீப்ளேவில் பந்து ஸ்டெம்பை மிஸ் செய்வது தெரிய, இந்தியா தனது ரீவீயூ வாய்ப்பை இழந்தது. புவனேஷ்வர், பும்ரா இருவரும் தத்தம் முதல் ஓவரை மெய்டினாக வீச, ஆட்டத்தின் 17வது பந்தில் நியூசிலாந்து முதல் ரன்னை எடுத்தது, குப்தில் ஏன் அந்த ரன்னை எடுத்தோம் என அடுத்த ஓவரில் நினைத்திருப்பார். பும்ரா வீசிய பந்தில் கோ...