தலைவரில் தொடங்கி ‘தல’யில் முடிந்த மகிழ்ச்சி
“’என்னமோ நடக்குது’ நான் மியூசிக் பண்ற எட்டாவது படம். அஞ்சு தமிழ்ப்படம்; ஒரு கன்னடப் படம்; ஒரு தெலுங்குப் படம் பண்ணியிருக்கேன். அந்தப் படமெல்லாம் தியேட்டருக்கு வந்தது.. ஒரு வாரத்திலேயே தியேட்டரில் இருந்து எடுத்துட்டாங்க. அதனால் நான் மியூசிக் பண்றேன் என மக்களுக்குத் தெரியாம போயிடுச்சு. இந்தப் படத்துலதான் நான் மியூசிக் டைரக்டராக ரீச் ஆகியிருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ‘தல’க்கு ஹேப்பி பர்த் டே! இன்னிக்கு நைட் பார்ட்டியிருக்கும். நான் போவேன்” என்றார் மகிழ்ச்சியுடன் பிரேம்ஜி அமரன்.
“இயக்குநர் ராஜபாண்டி எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். ‘இப்படிப் பண்ணலாமா?’ எனக் கேட்டால்.. ‘விருப்பப்படி பண்ணுங்க’ என எடிட்டிங் ரூம் பக்கமே வர மாட்டார். ராஜபாண்டி சார் ஸ்க்ரிப்ட் பார்த்தீங்கன்னா.. மூணு பெர்ஸ்பெக்டிவ்ல கதை அமைஞ்சிருக்கும். நான் அதை இன்னொரு வெர்ஷன்ல பண்ணலாமான்னு கேட்டப்ப.. டைரக்டர் ஒத்துக்கிட...