
எம்பிரான் – ரொமெடிப் படம்
“முற்றிலும் வேறுபட்ட சூழலில் இருந்து வரும் இருவரின் இடையே வரும் காதலைப் பற்றிய நகைச்சுவைப் படம். ரொமான்ஸும், காமெடி கலந்த படங்களை 'ரொமெடி' எனும் வகையின் கீழ் வரும். திரைக்கதை முற்றிலும் மாறுபட்டவை, வசனங்களைக் காட்டிலும் காட்சிகளின் மூலமே கதையைக் கொண்டு செல்கிறோம். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி காதலைச் சேர்த்து வைப்பது போல கதை அமைந்துள்ளது. ஜெயா மற்றும் பிரியனின் கதாபாத்திரங்களில் ராதிகா பிரீத்தி மற்றும் ரெஜித் மேனன் நன்றாக நடித்துள்ளனர். கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடித்துள்ள ராதிகா ப்ரீத்தி, இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். விக்ரமின் ‘நினைத்தது யாரோ' படத்தின் மூலம் அறிமுகமான ரெஜித் மேனன் இந்தப் படத்தில் முன்னனி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் சந்திர மௌலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ் மற்றும் வள்ளியப்பா நடித்துள்ளனர்” என்றார் இயக்குநர் கிருஷ்ண பாண்டி.
இந்தத் தி...