ஒரு நொடி விமர்சனம்
நம் வாழ்வின் ஏதேனும் ஒரு நொடியில் நடக்கும் யதார்த்தமான சம்பவங்கள் எப்படி நம் வாழ்க்கையையே புரட்டிப் போடும் என்பதை மர்மமும் திகிலும் கலந்து சுவாரஸ்யமாகப் பேசி இருக்கிறது ஒரு நொடி திரைப்படம்.கந்துவட்டி கொடுமைகள் மற்றும் நிலமோசடி சம்பவங்களில் ஈடுபடும் கரிமேடு தியாகு (வேல ராமமூர்த்தி) என்பவரிடம் தன் மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனுக்காக தன் நிலப்பத்திரத்தை ஒப்படைக்கிறார் சேகரன். ஆறு மாதம் கழித்து வட்டி மற்றும் அசலோடு பணத்தைக் கொடுத்துவிட்டு தன் நிலப்பத்திரத்தை மீட்டு வர செல்கிறார் சேகரன். சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரின் மனைவி சகுந்தலா புகார் அளிக்க இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறன் (தமன் குமார்) தலைமையிலான குழு அவ்வழக்கை விசாரிக்கத் துவங்குகிறது. முதல் சந்தேகமே கரிமேடு தியாகு மீது வர, போலீஸ் தன் விசாரணையை அங்கிருந்து துவங்குகிறது. விசாரணையின் ஊடாக சேகரன் என்ன ஆனார்…? என்பதை கண்டடைவதே இ...