15M + பார்வை கொண்டாட்டத்தில் “வேற மாறி ஆபிஸ்”
ஆஹா ஓடிடி இணையதளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் “வேற மாறி ஆபிஸ்”. மூன்று எபிசோடுகள் வெளியான நிலையில் வெற்றிகரமாக பதினைந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்த தொடர் பெற்றிருக்கிறது. இதைக் கொண்டாடும் வகையிலும் இன்னும் அதிகமான மக்களுக்கு இந்தத் தொடரை கொண்டு சேர்க்கும் வகையிலும் சென்னை வடபழனியில் உள்ள நெக்சஸ் ஃபோரம் மாலில் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது.இந்த நிகழ்வில் ‘வேற மாறி ஆபிஸ்”-ன் நட்சத்திரங்களான விஷ்ணு விஜய், ஆர்.ஜே.விஜய், விக்கல்ஸ் விக்ரம், வி.ஜே.பார்வதி, ஷியாமா, லாவண்யா, வி.ஜே.பப்பு, சவுந்தர்யா நஞ்சுண்டன், கண்ணதாசன், சஞ்சீவ் ஆகியோருடன் இத்தொடரின் இயக்குநரான சிதம்பரம் மற்றும் தயாரிப்பாளர் சிவகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.ஆஹா ஓடிடி இணையதளத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பவித்ரா குமார் பேசும் போது, “இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனை...