தப்பாட்டம் விமர்சனம்
இந்தப் படத்தின் நாயகன், 'பப்ளிக் ஸ்டார்' துரை சுதாகர் எனும் அறிமுக நாயகன் ஆவார். தப்பாட்டம் ஆடுபவராக நடித்துள்ளார். வாழ்க்கையைத் தப்பாக ஆடினால் தோற்று விடுவோம் என்றும் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.
படத்தின் காலமும் கதையும் 1984 இல் நிகழ்வதாகப் படம் தொடங்கும் பொழுதே சொல்லப்படுகிறது. கதாபாத்திரங்கள் அனைவரும் சாராயக்கடையே கதியென்ன உள்ளார்கள். வேறு வேலையின்றிக் குடித்து விட்டு சலம்புவதுதான் நாயகனுக்கும், அவன் கூட்டாளிகளுக்கும் வேலை என்று முதற்பாதி முழுவதும் காட்டுகிறார் இயக்குநர் முஜிபூர் ரஹ்மான். தப்பாட்டத்தின் சிறப்பை வசனமாகக் கூட எங்கேயும் பதியாதது உறுத்துகிறது.
நாயகனின் மாமாவாக இயக்குநரும் வேடம் ஏற்று நடித்துள்ளார். அவர் சாப்பிட்டு விட்டு பீடியைப் புகைக்க நினைக்கும் பொழுதெல்லாம், குடிக்காரர்கள் யாரேனும் வந்து அவரைத் தொந்தரவு செய்கிறார்கள் எனக் கதைக்குத் தேவையில்லாக் காட்சிகளை எல்லாம் ஒ...