Shadow

Tag: கோமாளி திரைப்படம்

கோமாளி விமர்சனம்

கோமாளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ட்ரெய்லர் வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியை நீக்கி, நாஞ்சில் சம்பத்தை மாற்றாக அக்காட்சியில் கொண்டு வந்துள்ளது படக்குழு. அதோடு நில்லாமல், கீழே எழுத்தாக, கோமாளி படத்தில் இருந்து ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி நீக்கம் எனப் பதிந்து, படையப்பா ரஜினி செந்திலைக் கலாய்ப்பது போல் ரஜினி ரசிகர்களைச் சாமர்த்தியமாகக் கலாய்த்துள்ளது படக்குழு. ஒரு விபத்தில் 16 வருடங்கள் கோமாவில் விழுந்து விடுகிறான் ரவி. அவன் அதிலிருந்து மீண்டதும், அசுர மாற்றம் அடைந்திருக்கும் அனைத்தையும் பார்த்துக் குழம்பி, 'என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?' என இந்த உலகத்தைப் பார்த்து கோமாளி போல் கேள்வி எழுப்புகிறான். கோமாளி ரவிக்குச் சொந்தமான சிலை ஒன்று, எம்.எல்.ஏ. தர்மராஜிடம் இருப்பது தெரிய வர, அதை மீட்டெடுத்து அவரால் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சரி செய்ய முடிகின்றதா என்பதுதான் படத்தின் கதை. முதல் பாதி ஜ...
கோமாளி பாட்டுப்புத்தகம் – 90’ஸ் கிட்ஸ்களுக்காக

கோமாளி பாட்டுப்புத்தகம் – 90’ஸ் கிட்ஸ்களுக்காக

சினிமா, திரைத் துளி
இன்று தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்துவிட்ட நிலையில், 90'ஸ் கிட்ஸ்களின் கொண்டாட்டங்கள் எல்லாம் பழங்கதையாகி விட்டன. அதிலொன்று பாட்டுப்புத்தகம். அவை இன்று பரிணாம வளர்ச்சியடைந்து, பாடல் வரிகளுடன் கூடிய காணொளியாக (Lyrical video) உருமாற்றம் கொண்டுள்ளது. அப்பொற்காலத்திற்கு மீண்டும் செல்வது சாத்தியமில்லை எனினும், கோமாளி படக்குழு தங்கள் படத்துக்கும் பாட்டுப் புத்தகத்தை உருவாக்கி, ரசிகர்களை 90 களின் இனிய நினைவுகளில் திளைக்க வைக்க முடிவு செய்துள்ளனர். "ட்ரெய்லரை, அனைவரும் அதில் பொதிந்துள்ள ஜாலியான நகைச்சுவைக்காக விரும்புவார்கள் என நினைத்தோம். ஆனால், 90 களின் நாஸ்டால்ஜியாவில் ரசிகர்கள் திளைக்க ஆரம்பித்தது, நாங்கள் எதிர்பார்க்காதது. அதனால் அக்காலகட்டத்தில் சிறப்பான அம்சங்களை மீள் உருவாக்கம் செய்யத் திட்டமிட்டோம். அதன் முதல் படியாக, பாட்டுப்புத்தகம் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். முன்பெல்லாம், ஒரு படத்த...