நவீன இதிகாசம் – சாரு நிவேதிதா
பா.வெங்கடேசனின் இரண்டாவது நாவலான ‘பாகீரதியின் மதியம்’ காலச்சுவடு பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய சாரு நிவேதிதா, நாவலை உச்சி முகர்ந்துவிட்டார்.
“முதலில் காலச்சுவடைப் பாராட்டணும். பிழைகளே இல்லை. சமீபத்தில் நான் படித்த புத்தகங்கள் அனைத்திலும் நிறைய பிழைகள். என் புத்தகத்துக்கு நான் தான் ஃப்ரூஃப் ரீடிங் செய்வேன். ஆனாலும் பிரிண்ட்டிங் போயிட்டு வர்றப்ப பிழைகள் வந்துடும். அதை மீண்டும் சரி பார்க்கணும். என் புத்தகத்தில் 10 பிழைகள் வந்துடுச்சு. என்னிடம் 5 லட்சம் இருந்தா எல்லாப் புத்தகத்தை வாங்கி அழிச்சிடுவேன். 'பாகீரதியின் மதியம்' புத்தக உருவாக்கத்தில் பங்குபெற்ற காலச்சுவடு ஆட்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நான் நன்றாக எழுதியிருப்பவர்களைப் பார்த்து, இவர்கள் என் வாரிசு எனச் சொல்லி விடுவேன். அது ஓர் அன்பு. அன்பால் அப்படி நாலஞ்சு பேரைச் சொல்லியிருக்கேன். ஆனா பா...