Shadow

Tag: டாம் ஹேன்க்ஸ்

இன்ஃபர்நோ விமர்சனம்

இன்ஃபர்நோ விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'டாவின்சி கோட்' நாவல் மூலம் பெரும் புகழ் ஈட்டியவர் எழுத்தாளர் டான் ப்ரெளன். அதைப் படமாக இயக்குநர் ரோன் ஹாவர்ட் எடுத்த பொழுது, அப்படத்தை இந்தியாவில் வெளியிட கிறிஸ்துவ அமைப்புகள் 2006இல் தடை கோரியது. படத்தின் மீதான இந்தியர்களின் எதிர்பார்ப்பை அது ஒன்றே எகிறச் செய்து, தடை நீக்கப்பட்டதும் 'அப்படி என்னத்தான் படத்தில் இருக்கு?' எனத் திரையரங்கை நோக்கித் தள்ளியது. அந்த எதிர்பார்ப்பின் நீட்சி, படமாக்கப்பட்டுள்ள எழுத்தாளரின் மூன்றாவது நாவலான இன்ஃபர்நோ வரையிலுமே தொடர்வது குறிப்பிடத்தக்கது. குறியீட்டியலில் (Symbology) பேராசிரியரான ராபர்ட் லேங்டன் புதிரை விடுவிப்பதோடு, இம்முறை உலகையே காக்கும் பெரும் பொறுப்போடு களமிறங்கியுள்ளார். எத்தகைய குறியீட்டையும் கட்டுடைக்கக் கூடிய லேங்டன், 'ப்ரெளனா இருக்குமே! அதில் ஹார்ட்டின் போட்டுத் தருவாங்களே! காலையில் எழுந்ததும் மக்கள் எல்லாம் குடிப்பாங்களே!' என காஃபி என்...