சங்குசக்கரம் விமர்சனம்
குழந்தைகளுக்கான ஒரு ஸ்பூஃப் பேய்ப்படம். தெறிக்க விட்டாலும், பேய்கள் யாரையும் கொல்வதில்லை. மாறாகச் சிறுவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தன் அறிவை மேம்படுத்திக் கொள்கின்றன பேய்கள்.
பாழடைந்த கோட்டை போன்ற பங்களாக்குள் சிக்கிக் கொள்ளும் ஒன்பது சிறுவர்களை பணப்பேய் பிடித்த மனிதர்கள் கொல்லப் பார்க்கின்றனர். அவர்களிடமிருந்து சிறுவர்களைப் பேய்கள் எப்படிப் பாதுகாக்கின்றன என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் அழகழகான சிறுவர்களின் பட்டாளம் ஒன்றுள்ளது. குட்டிப் பேய் மலராக நடித்திருக்கும் மோனிகா செம க்யூட். தனிமையில் விளையாட ஆள் இல்லாமல் தவிக்கும் அந்தக் குட்டிப் பேய்க்குச் சிறுவர்களைப் பார்த்ததும் செம குதூகலமாகி விடுகிறது.
படத்தின் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ள திலீப் சுப்புராயன், ஆகாயம் எனும் குழந்தைக் கடத்தல்காரனாக நடித்துள்ளார். நல்ல காமிக்கலான கதாபாத்திரத்தை நகைச்சுவையாகச் செய்துள்ளார்...