
குபேரா விமர்சனம் | Kuberaa Review
திருப்பதியில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் தேவாவின் பெயரில் ஷெல் கம்பெனி தொடங்கப்பட்டுப் பத்தாயிரம் கோடி டெபாசிட் செய்யப்படுகிறது. அப்பணத்தை மீண்டும் அவரிடமிருந்து வில்லன் பெறுவதற்குள், தேவா உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பித்துவிடுகிறார். அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் வில்லனிடமிருந்து பத்தாயிரம் கோடிக்குச் சொந்தக்காரரான பிச்சைக்காரன் தேவாவால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.ஒரு பொருளாதாரக் குற்றப் பின்னணியில் தொடங்கும் படம். அக்குற்றத்தைச் சாத்தியமாக்குவதற்கான செயற்முறை, சிறைப்பட்டிருக்கும் சி.பி.ஐ. அதிகாரியில் இருந்து சாலையோரத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள் வரை நீள்கிறது. மிக அழகாகப் படத்தின் முதற்பாதியில் இவற்றைக் கட்டமைக்கிறார் சேகர் கம்முலா.பெரும்கோடீஸ்வர வில்லன் நீரஜ் மித்ராவாக ஜிம் சார்ப் நடித்துள்ளார். அவரது பணக்காரத் தோரணையே, பார்வையாளர்களை அசெளகரியம் கொள...













