Shadow

Tag: நிகில்

வெற்றிப் பூரிப்பில் சக்தி

வெற்றிப் பூரிப்பில் சக்தி

சினிமா, திரைத் துளி
சின்னத்தம்பி, ரிக்ஷா மாமா, செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட படங்களில் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பின்னர் தனது தந்தை பி.வாசு இயக்கத்தில் ‘தொட்டால் பூ மலரும்’ படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் சக்தி வாசு. தனது ஜனரஞ்சகமான நடிப்பாலும், நடனம் சண்டைபயிற்சி என அனைத்து துறைகளிலும் தனித்துவமாக விளங்கியதாலும் சக்தி வாசு தனக்கென்று மக்களின் மனதில் இடத்தை தக்கவைத்து கொண்டார். சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமாருடன் இவர் இணைந்து நடித்த சிவலிங்கா திரைப்படம் பல திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடுகின்றது. தமிழை அடுத்து கன்னடத்திலும் தனது தனித் திறமையால் ஒரு கதாநாயகனாக உருவானதை நினைத்து சந்தோஷப் பூரிப்பில் இருக்கிறார் சக்தி வாசு. சிவலிங்காவின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தை விரைவில் தமிழில் அனைத்து ரசிகர்களும்...
சர்வதேச நாய்க் கடத்தல்

சர்வதேச நாய்க் கடத்தல்

சினிமா, திரைத் துளி
ரீச் மீடியா சொல்யூஷன் என்னும் புதிய பட நிறுவனம், சஹானா ஸ்டுடியோஸுடன் இணைந்து, “ஜூலியும் நாலு பேரும்” என்ற படத்தைத் தயாரிக்கிறது. இளம் இயக்குநரான சதீஷ்.R.V-க்கு இது முதற்படம். இப்படத்தைக்குறித்து இயக்குநர் சதீஷ்.R.V கூறுகையில், “இப்படம் சர்வதேச அளவில் நடக்கும் நாய்க் கடத்தலைப் பற்றிய படம். அது மட்டுமின்றி முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட காமெடிப் படம்”என்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது இப்படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்”. இப்படத்தின் மூலம், பேய் சீஸனைப் போல் நாய் சீஸனைத் துவங்கி வைத்துவிடுவார் போல் தெரிகிறது. படத்தைப் பற்றி இயக்குநர் சதீஷ் கூறுகையில், “விஜய் டி.வி. புகழ் அமுதவானன் மற்றும் ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜம்முவைச் சேர்ந்த ரீனா என்ற பெண் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தின் ஹீரோ அமெரிக்காவிலிருந்து கொ...
நாளை முதல் குடிக்க மாட்டேன் விமர்சனம்

நாளை முதல் குடிக்க மாட்டேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வார் இங்கிலீஷ் டீச்சர் மலர், ஆனா குடிக்காரர்களை மட்டும் எந்த ஜென்மத்துக்கும் மன்னிக்கவே மாட்டார். தனக்குக் குடிப்பழக்கம் உள்ளதை மறைத்து, மலரைக் காதலித்து மணம் புரிந்து கொள்கிறார் தமிழாசிரியர் அ.சிவக்குமார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. 'உள்ளொற்றி உள்ளுர்..' எனத் தொடங்கும் குறளில் இருந்து படம் தொடங்குகிறது. நாயகனின் குணத்தை விளக்க இக்குறளை உபயோகப்படுத்தியுள்ளனர். சின்னஞ்சிறு பட்ஜெட் படம். இயக்குநர் அண்ணன் செந்தில்தல்ராஜாவுக்காக அவரது M.G.ராஜாவே தயாரித்துள்ளார். முடிந்தளவு இழுத்துப் பிடித்துப் படத்தை எடுத்துள்ளது ஆரம்பம் முதலே பட்டவர்த்தணமாய்த் தெரிகிறது. எளிமையில் சுவாரசியத்துக்கு முனைந்துள்ளனர். கட்டுக்கோப்பான திரைக்கதை இல்லையெனினும், நாயகனாக நடித்திருக்கும் ராஜ் ஒற்றை ஆளாகப் படத்தைச் சுமக்கிறார். தமிழாசிரியராக நடித்திருக்கும் அவரது முழியும்,...
காமெடி கவ்வும் – நலன் குமாரசாமி

காமெடி கவ்வும் – நலன் குமாரசாமி

சினிமா, திரைத் துளி
சூது கவ்வும் படத்தின் கதைக்கு எதிர் திசையில் இப்படத்தின் கதையை அமைத்து அப்படத்தின் சாயல் இப்படத்தில் இல்லாதவாறு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். 'காதலும் கடந்து போகும்' ஒரு காதல் கலந்த காமெடி படம். முழுக்க காதல் கலந்த நகைச்சுவைப் படம் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. ஒன்று நகைச்சுவை அதிகமாக இருக்கும் இல்லையென்றால் காதல் கலந்த காட்சிகள் அதிகமாக இருக்கும். இப்படத்தில் இறுதிக் காட்சிகளுக்கு முன்பு வரை காட்சிகளோடு இழையோடும் நகைச்சுவை இருந்து கொண்டே இருக்கும். 'சத்யா' படத்தில் நடித்த சுந்தர் இப்படத்தில் கவுன்சிலராக நடித்துள்ளார். அவரிடம் பணியாற்றும் அடியாளாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். 'ப்ரேமம்' படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அப்படத்தினில் ஒரு நாயகியாக நடித்திருந்த மடோனா செபஸ்டியன் இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். வ...
இறுதிச்சுற்று விமர்சனம்

இறுதிச்சுற்று விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீனவப் பெண்ணான மதியின் திறமையைக் கண்டு கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து பாக்ஸிங் வெற்றியாளராக்க முயற்சி செய்கிறார் கோச் பிரபு செல்வராஜ். அம்முயற்சியில் பிரபு சந்திக்கும் சிக்கல்களும் தடைகளும் தான் படத்தின் கதை. வாவ்..  இயக்குநர் சுதா கொங்கரா அசத்தலான படத்தைக் கொடுத்துள்ளார். வேட்டை படத்துக்குப் பிறகு மீண்டும் மேடி தமிழ்ப் படம் பக்கம் திரும்பியுள்ளார். வேட்டை படத்திலிருந்ததை விட இப்படத்தில் இளைஞனாகத் தெரிகிறார் கோச் பிரபு செல்வராஜாக நடித்திருக்கும் மாதவன். ஆனால், படம் முழுவதும் 'அரைக்கிழம்' என்றே நாயகியாலும் மற்றவராலும் விளிக்கப்படுகிறார். மிகப் பொறுப்பான கதாபாத்திரத்தில் அற்புதமாகப் பொருந்துகிறார். குத்துச் சண்டை சங்கத்தில் நடக்கும் அரசியலைக் கண்டு கோபுமுறும் பொழுதும், குறிப்பாக ஊழலிலும் நயவஞ்சகத்திலும் ஊறியவர்களை எடுத்தெறிந்து அவமானப்படுத்தும் பொழுதும் கைத்தட்டல்களைப...