
Trauma விமர்சனம் | Trauma Review
ட்ராமா என்றால் அதிர்ச்சி, வேதனை எனப் பொருள் கொள்ளலாம், அவ்வேதனை மன அதிர்ச்சி, புற அதிர்ச்சி என இரண்டையும் குறிக்கும்.
திருமணமாகி நான்கு வருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லை என மன வேதனையில் உள்ளார் சுந்தரின் மனைவி கீதா. ஆட்டோ ஓட்டும் தந்தைக்கு ஒரு கால்-டேக்ஸி வாங்கித் தந்துவிட்டுத்தான் திருமணத்தைப் பற்றி யோசிக்கவேண்டும் என நினைக்கும் செல்வி கர்ப்பம் ஆகிவிடுகிறாள். இரண்டு தத்துக்குட்டி கார் திருடர்கள் காரில் பிணத்தோடு காரைத் திருடி போலீஸில் சிக்கிக் கொள்கிறார்கள். இம்மூன்று கதையும் ஒரு மெடிக்கல் ஸ்காமில் (Scam) வந்து இணைவதுதான் படத்தின் முடிவு.
கார் திருடர்களாக மதன் கோபாலும், ஸ்மைல் செல்வாவும் நடித்துள்ளனர். படத்தில் அவர்களது பங்கு முக்கியம் என்ற போதும், நகைச்சுவைக்காக வலிந்து திணிக்கப்பட்ட அசுவாரசியமான காட்சிகளும் வசனங்களும் கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கிறது. ஆட்டோ ஓட்டுநராக மறைந்த மாரிமுத்த...