Shadow

Tag: பரத் ரெட்டி

பயம் ஒரு பயணம் விமர்சனம்

பயம் ஒரு பயணம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேய்ப் படங்கள், காமெடிப் படங்களாக மாறி மிகுந்து விட்ட சூழலில் முழு நீள ‘சீரியஸ்’ பேய்ப் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மணிஷர்மா. தன்னைக் கொன்றவர்களைப் பட்டெனக் கொன்றுவிடும் பேய், நாயகனை மட்டும் பயமுறுத்தி ஓட விட்டுக் கொண்டே இருக்கிறது. அந்தப் பேய் ஏன், எதற்கு அப்படிச் செய்கிறது என்றும், நாயகனின் நிலை என்னானது என்பதும்தான் படத்தின் கதை. பரத் ரெட்டி முதல் முறையாக நாயகனாக நடித்துள்ளார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஓடிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். மகளின் அன்பையும், மகள் மீது அன்பு செலுத்துவதைப் பெரும்பேறாகக் கருதும் பாசமுள்ள தந்தையாகவும் உலா வந்துள்ளார் பரத். படத்தின் மையக்கருவே, மகள் மீது தந்தை கொண்ட அன்புதான் என்றும் சொல்லலாம். தந்தை மகள் மீது காட்டும் பாசம், படத்தில் வரும் கிளைக்கதையிலும் மையக்கருவாக வருகிறது. விஷாகா சிங்கின் தந்தையாக நடித்தி...
உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்

உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"உன்னைப்போல் ஒருவன்" என்பது உலக நாயகன் கமல் அவர்களின் படம் என்று நினைத்தால் அது பாதி தான் உண்மை. ஒரு நல்ல படத்தை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த கமல் எடுத்த முயற்சி என்பது தான் மீதி பாதி உண்மை. இப்படத்தின் ஆதாரமான பாலிவுட்டின் "வெட்னஸ்டே" படத்தின் உரிமையை ராஜ்கமல் நிறுவனம் வாங்கித் தமிழுக்கு ஏற்றாற்போல் சின்னஞ்சிறு மாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். கொடுக்கும் பணத்திற்கு நல்ல தக்காளியாக வாங்க வேண்டும் என்று கவலைப்படுபவன் சாதாரண மனிதன். எது நடந்தாலும் தனக்கேன் வம்பு என முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறு திசையில் செல்லும் அந்த சாமானிய மனிதன், சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பார்த்து மனம் நொந்து, தன்னால் முடிந்த பதில் நடவடிக்கை எடுக்க தீவிரம் காண்பித்தால் என்னாகும் என்பது தான் இப்படத்தின் ஒரு வரிக் கதை. 'சி4' என அழைக்கப்படும் செக்கோஸ்லோவக்கியன் ப்ளாஸ்டிக் குண்டுகளை சென்னையில் ஆறு இடத்தில் வைக...