ஐரா விமர்சனம்
'ஐரா' என்றால் யானையின் குறியீடு என்கிறார் இயக்குநர் சர்ஜுன். 'என்னது ஐரான்னா யானையா?' என வாய் பிளந்தால் ஐராவதம் என்கிறார். இதென்ன இந்திரனின் வெள்ளையான வாகனத்துக்கு வந்த சோதனை எனக் குழம்பி, யானையின் ஞாபகச்சக்திக்கும், பழிவாங்கும் குணத்திற்குமான குறியீடாகத் தலைப்பை உருவகப்படுத்திக்க வேண்டியுள்ளது.
விபத்தில் இறந்துவிடும் கருப்பு நயன்தாராவான பவானியின் பழிவாங்கும் படலம் தான் ஐரா படத்தின் ஒரு வரிக் கதை.
பட்டாம்பூச்சி எனப் படத்திற்குப் பெயர் வைத்திருந்தால் மிகப் பொருத்தமானதாய் இருந்திருக்கும். படத்தின் தொடக்கம் முதலே பட்டாம்பூச்சி முக்கிய பாத்திரமாக சோலோவாகவும், கும்பலாகவும் வருகின்றன. படத்தின் ஆதாரக் கருவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வைக்கச் சிரமப்படுகிறார் கதை, திரைக்கதை எழுதியுள்ள பிரியங்கா ரவீந்திரன். ஆதலால், நயன்தாரா முதன்முதலில் இரு வேடங்களில் நடித்திருந்தும் மனதில் பதியவில்லை.
ஓர் அழுத்தமான...