Shadow

Tag: பி.வாசு

சந்திரமுகி 2 விமர்சனம்

சந்திரமுகி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா, ரவி மரியா,  விக்னேஷ், சுரேஷ் மேனன் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் படம் சந்திரமுகி 2.  சந்திரமுகி 2-க்கும், சந்திரமுகி 1-க்கும் பெரிய வித்தியாசம் என்றால் அது நடிகர் நடிகைகள் மாற்றம் மட்டும் தான். மற்றபடி சந்திரமுகியில் என்னென்ன இருந்ததோ அது அத்தனையும் இந்த சந்திரமுகி 2 இலும் இருக்கிறது. ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது, ஒரு பெரிய பாம்பு  வருகிறது,  வேண்டா விருந்தாளியாக நாயகன் வருகிறார், பிறகு குடும்பத்திடம் நல்ல பெயரும் வாங்குகிறார்.  பக்கத்து வீட்டுப் பெண்ணாக அரண்மனை மீதான அலாதி ஆவலுடன் நாயகி இருக்கிறார்.  நாயகனுக்கு பக்கத்து வீட்டுப் பெண் மேல் காதலும் வருகிறது. சந்திரமுகி அறை ரகசியமாகத் திறக்கப்படுகிறது. சந்திரமுகி ஆ...
ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி கொடுத்த சுபாஷ்கரன்..!

ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி கொடுத்த சுபாஷ்கரன்..!

சினிமா, திரைச் செய்தி
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்,  ராகவா லாரன்ஸ்  நடிப்பில்  உருவான ‘சந்திரமுகி 2’  படத்தின்  இசை  வெளியீட்டு  விழா  நேற்று  நடைபெற்றது.  இந்த  விழாவில்  லைகா  நிறுவனத்தின்  சேர்மன்  சுபாஷ்கரன்  கலந்து கொண்டார்.இந்த  நிகழ்ச்சி  சிறப்பாக  நடந்து  முடிந்த  நிலையில்  திடீரென எந்தவிதமான திட்டமிடலும்  இல்லாமல்  ராகவா லாரன்ஸ்  நடத்தி  வரும் அறக்கட்டளைக்கு  சுபாஷ்கரன்  ஒரு  கோடி  ரூபாய்  நன்கொடை  அளித்தார்.ராகவா லாரன்ஸ்  ஏற்கனவே பல  குழந்தைகளை  தத்தெடுத்து  வளர்த்து வருகிறார்  என்பதும்,  குறிப்பாக  மாற்றுத்திறனாளி  குழந்தைகளுக்கு  உதவி செய்து வருகிறார்  என்பதும்  தெரிந்ததே.  இது  குறித்து  கேள்விப்பட்ட சுபாஷ்கரன்  அவரது  அறக்கட்டளைக்கு  ஒரு  கோடி  ரூபாய்  நன்கொடை வழங்கியுள்ளார்.அதுமட்டுமின்றி  ராகவா  லாரன்ஸின்  ஆதரவுடன்  இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள்  கொண்ட  நடன குழுவினருடன்  மேடைய...
புதிய சந்திரமுகியாக கங்கனா ரனாவத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

புதிய சந்திரமுகியாக கங்கனா ரனாவத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா, திரைத் துளி
பிரம்மாண்டமான படங்களைத் தயாரிப்பதற்கு இந்திய அளவில் பெயர்பெற்ற தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடெக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் சந்திரமுகி-2 திரைப்படம் பலகோடி பொருட்செலவில் உருவாகி வருகிறது.  திகில்  காமெடி கலந்து பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் சந்திரமுகி – 2 திரைப்படத்தில் சந்திரமுகியாக நடிக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் முதல் தோற்றப் புகைப்படம், அதாவது  ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.மிகப் பெரிய  வெற்றியைப் பெற்ற  திரைப்படங்களை இயக்கிய  பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது  படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, 'வைகைப்புயல்' வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரி...