Shadow

Tag: போதை ஏறி புத்தி மாறி திரைப்படம்

போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கல்யாணத்திற்கு முன் தினம், நாயகனுக்குப் போதை ஏறி, அவன் புத்தி மாறுவதால், என்னென்ன விளைவுகளை எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டு விபரீதமாகிவிடுவதுதான் படத்தின் மையக்கரு. உண்மையில், போதை தேடும் நபர்கள் எல்லாம் ஸ்டெடியாக இருக்க, மணப்பெண்ணான ஜனனியிடம் சும்மா விளையாட நினைக்கும் கார்த்திக்கின் வாழ்க்கை தலைகீழாய்ப் புரள்கிறது. சமீபத்திய ஸ்பைடர்-மேன் படத்தில், தொழில்நுட்பம் கொண்டு வில்லன் உருவாக்கும் மாய உலகத்தை, போதைப் பொடியை மூக்கினுள் இழுத்துக் கொண்டு உருவாக்கிக் கொள்கிறான் கார்த்திக். அவன் புத்தி எப்படி எல்லாம் மாறுகிறது என படம் பேசுகிறது. நல்ல த்ரில்லர் படமாக வந்திருக்க வேண்டிய படம். ஆனால், மெஸ்சேஜும் வேண்டுமென்ற இயக்குநர் K.R.சந்துருவின் உளக்கிடக்கை, அதற்கு எமனாகிவிட்டது. தலைப்பிலேயே அவரது விருப்பத்தைப் பட்டவர்த்தனமாய் உணர்த்திவிடுகிறார். போதை ஏறினால் புத்தி மாறிவிடும் எ...
போதை ஏறி புத்தி மாறி – நாயகி துஷாரா

போதை ஏறி புத்தி மாறி – நாயகி துஷாரா

சினிமா, திரைத் துளி
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள போதை ஏறி புத்தி மாறி படத்தை சந்துரு கே.ஆர் இயக்கியுள்ளார். வரும் ஜூலை 12ஆம் தேதி உலகளவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தீரஜ், ப்ரதாயினி மற்றும் துஷாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள, இந்தப் படத்தில் ராதாரவி, சார்லி, அஜய் மற்றும் இன்னும் சில நடிகர்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் காட்சி ரீதியாகப் படத்துக்குப் பக்கபலமாக இருக்க, கே.பி. இசையமைத்திருக்கிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். கதிர் நடராசன் திரைக்கதை எழுதியுள்ளார். “ஆரம்பத்தில், இயக்குநர் சந்துரு சார் என்னை அழைத்து, இந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டார். படத்தின் முழுக் கதையைப் பற்றிக் கூட நாங்கள் பெரிதாக உரையாடவில்லை. பின், இந்தப் படத்தைப் பற்றி மிக நீண்ட காலமாக அவரது தரப்பில் இருந்து எனக்கு எந்தத் தகவலும் ...
போதை ஏறினால் புத்தி மாறும்

போதை ஏறினால் புத்தி மாறும்

சினிமா, திரைத் துளி
சில மனிதர்களின் வாழ்வில், போதை மயக்கம் முக்கிய பங்கினை வகிக்கிறது. அது அம்மனிதர்களின் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் திசை திருப்புகிறது. இந்த மாதிரி விஷயங்களை தீவிரமாகப் பேசும் ஒரு படம் தான் 'போதை ஏறி புத்தி மாறி'. 'ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ்' சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குநர் கே.ஆர்.சந்துரு இயக்குகிறார். பிரபலமான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே பி இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும் பணிபுரிகிறார்கள். படத்தின் தலைப்பே மொத்த படத்தைப் பற்றியும் சொல்லும். சீட்டின் நுனிக்கே வர வைக்கும் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு த்ரில்லர் படமாக இது இருக்கும். குறும்படங்களில் நாயகனாகக் கலக்கிய தீரஜ் இந்தப் படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார். "தீரஜ் என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் குறும்படங்களில் ஒன்றாகப் பணியாற்றி...