Shadow

Tag: மம்மூட்டி

மாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை

மாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை

சினிமா, திரைத் துளி
போர் வீரனின் கதையை பிரம்மாண்டமாக சொல்லும் மம்முட்டியின் “மாமாங்கம்” படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பில் தனது கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் மம்முட்டி. படத்தின் இயக்குநர் பத்மகுமார், "மம்முட்டி சாரின் பிரபல்யம், ரசிகர் வட்டம் மலையாள எல்லைகளைக் கடந்தது. இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகராகப் போற்றப்படுபவர். தமிழில் அவர் பல தொடர் வெற்றிப்படங்களைத் தந்து பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார். தமிழ்ப்படங்களில் அவரது தமிழ் உச்சரிப்பு மிகத் தெளிவாக, தமிழ் மண் மனம் மாறாததாக இருக்கும். தமிழர்கள் போன்றே பேசும் அவரது தமிழ்மொழி வன்மை, மலையாள நடிகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தும். “மாமாங்கம்” படத்திற்குத் தானே தமிழில் குரல் கொடுப்பதாக அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை எங்களை வெகுவாக ஆச்சர்யப்படுத்த...
பேரன்பு விமர்சனம்

பேரன்பு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பனிமூட்டம் நிறைந்த அந்தப் பரிசல் பயணத்தில் மம்மூட்டி தன் கனத்த குரலில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள் என்று சொல்லி தனது கதையைச் சொல்லத் துவங்கி இயற்கை பேரன்பாலானது என்று முடிக்கும் போது உண்மையில் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று புலனாகிறது. மூளை முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பதின்ம வயது பெண்ணை தனி ஆளாக தகப்பனாக நின்று தாங்குகின்ற ஒரு மனிதனின் பெருங்கதை தான் பேரன்பு. ஒரு பதின்ம வயதுப் பெண்ணிற்கு அவளது மாதவிலக்கின்போது 'பேட்' மாற்றுவதிலிருந்து, மூளை முடக்குவாதமே வந்தாலும் உடல் தினவுகள் அவர்களையும் விட்டு விடுவதில்லை என்றறிந்து தன் மகளின் உடல்பசியைத் தீர்க்க எவரேனும் கிடைப்பார்களா என்று ஒரு தகப்பனாக யாசிப்பதென்று பேசாப்பொருளைப் பேசும் படம் உலுக்கி விடுகிறது ஆன்மாவை. 'மூளை முடக்கு வாதம் வந்த அல்லது உடல் குறைபாடுள்ள மனிதர்களிடம் இனியாவது பேரன்போடு நடந்து கொள்ளுங்கள் பதர்கள...