Shadow

Tag: மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

ரோகிணி – மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்

ரோகிணி – மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்

சினிமா, திரைத் துளி, மற்றவை
பிக் பாஸ் சீசன் - 1 புகழ் ஆரவ் நடிக்க, 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.' எனும் படத்தை இயக்குகிறார் இயக்குநர் சரண். இப்படத்தில், டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார், பட்டாளம் சுந்தரிபாய் எனும் மிரட்டலான பாத்திரத்தில் நடிக்க, ரோகிணியோ காது கேட்காத வாய் பேச முடியாத பாத்திரத்தில் நடித்துள்ளார். ரோகிணி ஏற்று நடித்திருக்கும் லதாம்மா பாத்திரத்தைப் பற்றி இயக்குநர் சரண் குறிப்பிடுகையில், "ரோகிணி, ஆகச் சிறந்த நடிகைகளில் இவருக்கு ஒரு தனித்துவமான இடம் எப்போதும் உண்டு! அவரிடம் கதையை விவரிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அவர் தன்னை லதாம்மாவாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார். அவருடனான உரையாடல்கள், காட்சி விவரங்களைக் கூட அதன்பின் சைகை மொழியிலேயே என்னைச் சொல்லப் பணித்தார். கதாநாயகன் ஆரவ் மற்றும் புதுமுகம் விஹான் ஆகியோருடன் பயிற்சிப் பட்டறையாக அது விரிவடைந்தது. படப்பிடிப்பின் போது அம்மா உணவகத்தில் பணி பு...