Shadow

Tag: மேட் மேக்ஸ்

மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட் விமர்சனம்

மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
MAD MAX: FURY ROAD உலகம் முழுவதும் பாலைவனமாக மாறிவிட்டால் மனிதர்கள் என்னாவார்கள்? ஃப்யூரி ரோடின் கதைக்களமும், காலக்கட்டமும் அதான். இம்மார்ட்டன் ஜோ எனும் சர்வதிகாரியின் ஐந்து மனைவிகளைக் கடத்தி விடுகிறார் கமாண்டர் (imperator) ஃப்யூரியோஸா. தனது ஐந்து மனைவிகளைக் காப்பாற்ற மொத்த படைப்பிரிவையும் பாலைவனத்தில் இறக்குகிறார் ஜோ. சந்தர்ப்ப நெருக்கடியால், மேக்ஸ் ஃப்யூரியோஸாக்கு உதவ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஜோ, ஃப்யூரியோஸாவைப் பிடித்தாரா இல்லையா என்பதுதான் கதை. ஃப்யூரியோஸாவாக சார்லைஸ் தெரான். நம்மூர் இயக்குநர் பாலா தனது பட நாயகன்களின் முகத்தை உருமாற்றுவதுபோல், சார்லைஸ் தெரான் இப்படத்திற்காக கனக் கச்சிதமாக உருமாறியுள்ளார். ஃப்யூரியோஸாவாக தன்னைப் பொருத்திக் கொள்வதற்காக, மொட்டையடித்துக் கொண்டு இயக்குநருக்கு தனது புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார். இப்படம், ஒரு சூப்பர் ஹீரோயின் படம். நாயகனின் பங...
மெல் கிப்சனில்லா ‘மேட் மேக்ஸ்’

மெல் கிப்சனில்லா ‘மேட் மேக்ஸ்’

சினிமா, திரைத் துளி
1979 இல், ஒரு ஆஸ்ட்ரேலியப் படம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. அது சிட்னி மருத்துவர் ஜார்ஜ் மில்லர் இயக்கிய “மேட் மேக்ஸ்” படம். அவசர சிகிச்சைப் பிரிவில் பணி புரிந்த வந்த மில்லர், விபத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சை அளித்துள்ளார். அந்த சிகிச்சை அனுபவங்கள் அவருக்களித்த தாக்கங்கள் அவர் படத்தில் பிரதிபலித்தது. அன்றைய தேதியில், ‘ரோட் மூவிஸ்’ படங்களுக்கு இப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டராக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் நாயகன் நமக்கு மிகவும் பரிச்சயமான ஹாலிவுட் ஹீரோ மெல் கிப்சன். இதன் அடுத்தடுத்த பாகங்கள் 1981இலும், 1985இலும் வந்தன. 1998 இல் நான்காவது பாகத்திற்கான விதை எழுந்ததாக தன் முயற்சிகளை மேற்கொண்டார் ஜார்ஜ் மில்லர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக படம் ஆரம்பக் கிடப்பிலேயே இருந்தது. தன் பாதையை மாற்றிக் கொண்ட மெல் கிப்சனும், மேட் மேக்ஸ் சீரிசின் நான்காவது படத்திலிருந்து விலகிக் கொண...