
வருணன் – தண்ணீர் கேன் பிரச்சனை 50 வருஷத்திற்கும் இருக்கும்
யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி, சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'வருணன் - காட் ஆப் வாட்டர்’ ஆகும். 'நீரின்றி அமையாது உலகு' எனும் டேக் லைனுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் 14 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
நடிகர் ஜெயப்பிரகாஷ், ''இப்படத்தின் இயக்குநர் எடுத்திருக்கும் கதை தண்ணீர் கேன். இந்தப் பிரச்சனை 10 வருஷத்திற்கு முன்னாலும் இருந்தது இன்னும் 50 வருஷத்திற்கும் இருக்கும். இப்படத்தின் கதை அவுட்டேட்டட் அல்ல. அனைவருக்கும் நெருக்கமான கதை தான். இந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடித்திருக்கும் ராதாரவி, ஜீவா ரவி, துஷ்யந்த் என அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்...