”விருஷபா”-வில் இணைந்த ஹாலிவுட் நிர்வாகத் தயாரிப்பாளர்.
இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா S கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” மிகப்பிரமாண்டமான ஆக்சன் மற்றும் VFX காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமான டிராமாவாக, 2024ல் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் அடுத்த ஆளுமையாக தற்போது ஹாலிவுட்டிலிருந்து நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆஸ்கர் விருதுகளை வென்ற Moonlight (2016), Three Billboards Outside Ebbing மற்றும் Missouri (2017) போன்ற பல ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்ததோடு, ஹாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் நிக் துர்லோவ்.
ஹாலிவுட் பிரபலமான நிக் துர்லோவ் இணைந்திருப்பதால், விருஷபா படத்தின் தரம் இந்திய அளவை த...