Shadow

Tag: லிங்கேஷ்

காலேஜ் ரோடு விமர்சனம்

காலேஜ் ரோடு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கல்வியென்பது நமது தேவையன்று; அது ஒவ்வொருவரின் உரிமை என்பதை கமர்ஷியலுடன் சொல்லியுள்ளது காலேஜ் ரோடு திரைப்படம். சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றைக் கண்டுபிடித்துள்ள லிங்கேஷ், அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சி செய்கிறார். அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷ், வங்கிக் கொள்ளைச் சம்பவங்களுடன் எப்படி தொடர்புப்படப்படுகிறார் என்பதையும், வங்கிக் கொள்ளைக்கான காரணமென்ன என்பதையும், கல்வி எப்படியானவர்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும், பல அதிரடி திருப்பங்களோடு விரிவாகப் பேசுகிறது படத்தின் திரைக்கதை. முதன்மை நாயகனாக லிங்கேஷ், இந்தப் படத்தில் மிக முதிர்ச்சியான நடிப்பை நன்றாக வழங்கியுள்ளார். உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவர...
லிங்கேஷ் – கல்லூரி டூ காலேஜ் ரோடு

லிங்கேஷ் – கல்லூரி டூ காலேஜ் ரோடு

சினிமா, திரைத் துளி
தமன்னாவோடு 'கல்லூரி' படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் நடிக்காமல் போனவர். தற்போது, ‘காலேஜ் ரோடு’ படத்தின் மூலம் கதாநாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ். பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். இவர் நடித்த கபாலி, பரியேறும் பெருமாள் முதலிய படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தாலும், கதாநாயகனாக இப்போதுதான் அறிமுகமாகிறார். காலேஜ் ரோடு திரைப்படம், டிசம்பர் 30 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது . ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ரஞ்சித் அவர்கள் பாராட்டியுள்ளார். மாணவர்களின் கல்விக் கடனைப் பற்றிப் பேசியிருக்கும் இத்திரைப்படம், மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் ஆவலுடன் இருக்கின்றனர். பத்து வருடங்களுக்கு முன்னால், கல்லூரி படத்திற்காக எடையைக் குறைத்து, இரண்டு வருடங்கள் திரைப்படத்திற்காகக் கடினமாக உழைத்த லிங்கேஷ்...
காலேஜ் ரோடு – கல்வி நிலையங்களின் பிரச்சினைகளைப் பேசும் படம்

காலேஜ் ரோடு – கல்வி நிலையங்களின் பிரச்சினைகளைப் பேசும் படம்

சினிமா, திரைத் துளி
கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், V1, டானாக்காரன், மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'காலேஜ் ரோடு' . கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையைப் பற்றி பேசுகிறப் படமாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும், அந்தக் கல்வி இன்று என்னவாக இருக்கிறது, அது அனைவருக்குமானதாக இருக்கிறதா, எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப் போகிறது என்பதைப் பற்றிப் பேசுகிறபடமாக இருக்கும். பரபரப்பான திருப்பங்களோடு காதல், நட்பு, நகைச்சுவை கலந்த கம்ர்ஷியலான படமாகவும் இருக்கும். கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து திரைப்படத்தை எடுத்துள்ளோம் என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் ஜெய் அமர்சிங். இந்தப் படத்தைப் பார்த்துத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். இந்தப் படத்தைப் பார்த்த கல்லூரி மாணவர்கள...