Shadow

லிங்கேஷ் – கல்லூரி டூ காலேஜ் ரோடு

தமன்னாவோடு ‘கல்லூரி’ படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் நடிக்காமல் போனவர். தற்போது, ‘காலேஜ் ரோடு’ படத்தின் மூலம் கதாநாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ்.

பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். இவர் நடித்த கபாலி, பரியேறும் பெருமாள் முதலிய படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தாலும், கதாநாயகனாக இப்போதுதான் அறிமுகமாகிறார். காலேஜ் ரோடு திரைப்படம், டிசம்பர் 30 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது .

ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ரஞ்சித் அவர்கள் பாராட்டியுள்ளார். மாணவர்களின் கல்விக் கடனைப் பற்றிப் பேசியிருக்கும் இத்திரைப்படம், மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் ஆவலுடன் இருக்கின்றனர்.

பத்து வருடங்களுக்கு முன்னால், கல்லூரி படத்திற்காக எடையைக் குறைத்து, இரண்டு வருடங்கள் திரைப்படத்திற்காகக் கடினமாக உழைத்த லிங்கேஷ், பின்னர் தொகுப்பாளராக தன் வாழ்க்கையைக் கடந்து, மெட்ராஸ், கபாலி பரியேறும் பெருமாள், ரஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வந்தார்.

லிங்கேஷின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பான போராட்டமும், காலேஜ்ரோடு திரைப்படத்தில் நாயகனாகப் பரிணமிக்க உதவியுள்ளது. இப்படத்தை பிவிஆர் பிச்சர்ஸ் வெளியிடுகின்றனர்.