32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

விஜய் சேதுபதி

88 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 6 / 6
செய்திகள் வரிசை (பக்கம் 6)
றெக்க விமர்சனம் சினிமா

றெக்க விமர்சனம்

எத்தனை பேர் வந்தாலும் அடித்து துவம்சம் செய்யக் கூடியவன் சிவா என்பது தான் இந்த ‘மாஸ் ஹீரோ’ படத்தின் ஒரு வரிக் கதை. ஆனால், சிவாவிற்கு சின்னச் சின்ன சண்டை எல்லாம் போடுவதில் விருப்பமில்லை. அதுக்கும் மேல், பெரிய சண்டைக்குக் காத்துக் கொண்டிருப்பவன். கிறுக்குத்தனமான கதாநாயகியாக திரையில் தோன்ற முகத்தில் குழந்தைத்தனமோ, அப்பாவித்தனமோ மிகவும் அவசியம். இப்படியான க்ளிஷேவை லட்சுமி மேனனைக் கொண்டு உடைத்துள்ளார் இயக்குநர். பாரதி மணிவாசகமாக மேடையில் இருந்து அவர் காட்டும் கம்பீரம் நன்றாக […]

09/10/2016 Dinesh R
ஆண்டவன் கட்டளை விமர்சனம் சினிமா

ஆண்டவன் கட்டளை விமர்சனம்

லண்டனுக்குச் செல்ல டூரிஸ்ட் விசா இலகுவாகக் கிடைக்க, ட்ராவல் ஏஜென்ட்டின் அறிவுரைப்படி மணமானவர் என பொய்யான தகவலைப் பாஸ்போர்ட்டில் கொடுத்து விடுகிறார் காந்தி. பின், இந்தியாவிலேயே கிடைக்கும் வேலையைத் தக்க வைக்க, இல்லாத மனைவியின் பெயரைப் பாஸ்போர்ட்டில் இருந்து அகற்ற காந்தி படும்பாடு தான் படத்தின் கதை. போலி ஆவணங்கள் பக்காவாக இருந்தும், காந்தி சொல்லும் ஒரே ஒரு உண்மை அவருக்கு விசா கிடைக்க விடாமல் செய்து விடுகிறது. பிறகு சொன்ன பொய்யை, சரி செய்ய நினைக்கையில் […]

24/09/2016 Dinesh R
தர்மதுரை விமர்சனம் சினிமா

தர்மதுரை விமர்சனம்

பெரும் பலம் பொருந்திய அமைப்புகளான குடும்பமும் சமூகமும் தனக்கெனப் பிரத்தியேகமான சில விதிமுறைகளை வைத்துள்ளன. அது, தனி நபர்களால் மீறப்படும் பொழுது, அமைப்பின் கண்ணுக்குத் தெரியா அதிகாரம் தனி நபர் விருப்பத்தை நசுக்க முயற்சி செய்யும். தனி நபரான தர்மதுரை, அவ்வமைப்புகளிடம் சிக்கி எப்படி மீள்கிறான் என்பதே படத்தின் கதை. காமராஜ் எனும் மருத்துவப் பேராசிரியராக ராஜேஷ் நடித்துள்ளார். முனியாண்டி என்ற இயற்பெயர் கொண்டவர், காமராஜரின் சத்துணவுத் திட்டத்தால் பயன்பெற்றவர் என்ற நன்றிக்காகத் தன் பெயரையே மாற்றிக் […]

21/08/2016 Dinesh R
இறைவி விமர்சனம் சினிமா

இறைவி விமர்சனம்

பெண்களை, குறிப்பாக மனைவியை ஆண்கள் எப்படி நடத்துகிறார்கள்? கணவனின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் மனைவி எனும் இறைவிகளுக்கு இருக்கும் பொறுமை, அனுசரணை, விட்டுக் கொடுக்கும் மனோபாவம் போன்றவை ஆண்களுக்கு உண்டா என்ற கேள்வியை முன் வைக்கிறது படம். பள்ளி மாணவி பொன்னி, புதிதாகத் திருமணமாகும் ஐ.டி. துறை ஊழியை யாழினி, மூத்த மகனின் திருமணத்தில் களைத்திருக்கும் மீனாக்ஷி ஆகிய மூன்று பெண்களைப் பற்றியும், அவர்களைச் சார்ந்திருக்கும் ஆண்களையும் பற்றிய கதை இது. தயாரிப்பு நிறுவனங்களின் லோகோ […]

04/06/2016 Dinesh R
காதலும் கடந்து போகும் விமர்சனம் சினிமா

காதலும் கடந்து போகும் விமர்சனம்

நெட்வொர்க்கிங்கில் வேலை தேடும் யாழினியும், அடியாளாக இருக்கும் கதிரும் எதிரெதிர் வீட்டில் வசிக்கின்றனர். அவர்களுக்குள் ஏற்படும் அறிமுகமும், நட்புமுமே படத்தின் கதை. வசனங்களில் நகைச்சுவை இருந்தாலும், படம் ஆங்காங்கே, குறிப்பாக முடியும் வேளையில் மனதை வருடிச் செல்கிறது. ‘உனக்கொரு வாழ்க்கை உண்டு’ எனச் சொல்லி, ஒருவனுக்கு மூளைச்சலவை செய்யப்படும் பொழுது, மெல்ல பதற்றம் எட்டிப் பார்க்கிறது. எல்லா மூளைச்சலவைக்கும் பின்னும் ஓர் அழகான கனவு தூண்டிலாக்கப்படும். உலகைச் சூழ்ந்துள்ள பெரும் அபாயங்களின் சிறு விதை இப்படித்தான் முளைக்கிறது. […]

12/03/2016 Dinesh R
சேதுபதி விமர்சனம் சினிமா

சேதுபதி விமர்சனம்

‘போலிஸ் வேலை தான் கெத்து. யாரையும் அடிக்கலாம்’ என்பான் நானும் ரெளடிதான் பாண்டி. அதே போலொரு ஆள் தான் சேதுபதியும். பொதுப்புத்தியில் உறைந்து விட்ட நியாய தர்மங்கள் மட்டுமே சரியென்று நம்பி, அதைப் பிடிவாதமாகக் கடைபிடிக்கும் நல்ல (!?) போலிஸ். அது எத்தகைய தர்மம் என்றால்? எய்தவனுக்கு நீதிமன்றம், எய்யப்படும் அடியாட்களுக்கு எவ்விதக் கேள்வியுமின்றி என்கவுண்ட்டர் என்பதே அது. அப்படியான தர்மத்தை வழுவாத நேர்மையான போலிஸ் சேதுபதி. பாதிக்கப்பட்டோரைக் கண்டால் மனம் இரங்கும் ஈரமனசுக்காரர். இப்படிப்பட்டவரை உரண்டைக்கு […]

21/02/2016 Dinesh R
நானும் ரெளடிதான் விமர்சனம் சினிமா

நானும் ரெளடிதான் விமர்சனம்

தன்னை ரெளடி என நம்பும் ஒருவனிடம், அவனது காதலி ஒரு கொலை செய்யச் சொல்கிறாள். பின் என்னாகிறது என்பதுதான் கதை. தனி ஒருவன், மாயா முதலிய படங்களைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் கோலேச்சியுள்ளார் நயன்தாரா. காது கேளாத காதம்பரியாகக் கலக்கியுள்ளார். பொதுவாக, இது போன்ற படங்களில் அல்லது பெரும்பாலான தமிழ்ப் படங்களில் நாயகியை ஊறுகாய் போலவே உபயோகப்படுத்துவார்கள். இப்படத்தின் வெற்றி, நாயகிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் இருந்தே தொடங்குகிறது. இந்தப் படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், கதாபாத்திரத் தேர்வுகள். […]

22/10/2015 Dinesh R
ஆரஞ்சு மிட்டாய் விமர்சனம் சினிமா

ஆரஞ்சு மிட்டாய் விமர்சனம்

இரண்டு மணி நேரத்துக்கும் பத்து நிமிடங்கள் குறைவான நீளம் கொண்ட படம். குத்துப் பாட்டுகளோ, சண்டைக் காட்சிகளோ இல்லாத படம். தனிமையில் வாடும் முதியவரான கைலாசம், தனக்கு நெஞ்சு வலியென 108 சேவைக்கு அழைத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கிறார். கைலாசத்திடம் மாட்டிக் கொண்டு, ஆம்புலன்ஸ் ட்ரைவரும் இ.எம்.டி. (Emergemcy Medical Technician) சத்யாவும் படும்பாடுதான் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் கதை. விஜய் சேதுபதியின் அறிமுகத்துக்குப் பின் படம் கலகலக்கத் தொடங்குகிறது. ஆனால் படம் தொடங்கிய நாற்பதே நிமிடங்களுக்குள், படத்துள் […]

31/07/2015 Dinesh R
புறம்போக்கு என்கிற பொதுவுடமை விமர்சனம் சினிமா

புறம்போக்கு என்கிற பொதுவுடமை விமர்சனம்

ஆறாண்டுகளுக்கு பிறகு வந்துள்ள எஸ்.பி.ஜனநாதனின் படம். அந்த எதிர்பார்ப்பைத் துளியும் ஏமாற்றாமல் அசத்தியுள்ளார். மக்கள் விடுதலைக்காகப் போராடி இறந்த அனைத்து தோழர்களுக்கும் இப்படத்தைச் சமர்ப்பிக்கிறார். பாலுச்சாமி எனும் கம்யூனிஸ்ட்க்கு, தேசத் துரோகக் குற்றத்துக்காக மூன்று தூக்கு தண்டனையை அறிவிக்கிறது இந்திய அரசு. தூக்கு தண்டனையை நிறைவேற்ற, சிறை அதிகாரியான ஏ.டி.ஜி.பி. மெக்காலே ஐ.பி.எஸ். வசம் ஒப்படைக்கப்படுகிறார் பாலுச்சாமி. தீர்ப்பின்படிபாலுச்சாமியைத் தூக்கிலிட, எமலிங்கம் எனும் ஹேங்மேனின் உதவி தேவைப்படுகிறது. எமலிங்கத்தின் உதவி கிடைத்ததா? பாலுச்சாமிக்கு தண்டனையை மெக்காலே நிறைவேற்றினாரா […]

15/05/2015 Dinesh R
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம் சினிமா

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம்

‘ரெளத்திரம்’ பட இயக்குநர் கோகுலின் இரண்டாவது படமிது. காந்திஜியின் பிறந்தநாளன்று படத்தினை வெளியிட தோதாய் படத்தில் ஒரு மெஸ்சேஜும் வைத்துள்ளார். பாலா என்பவர் குடித்ததால் விபத்து நேர்கிறது; குமார் என்பவர் குடிக்காமல் இருப்பதால் இரு உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.   சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி. இன்றைய ட்ரென்டின் படி, பொறுப்பில்லாத இளைஞராக வருகிறார். அவரது ஒரே வேலை, எதிர் வீட்டு குமுதாவை ‘ஹேப்பி’ செய்வதும் குடிப்பதும் தான். படத்தின் கடைசிக் காட்சிகளில் அவர் செய்யும் ரொமான்ஸ் […]

02/10/2013 admin
சூது கவ்வும் விமர்சனம் சினிமா

சூது கவ்வும் விமர்சனம்

படம் தொடங்கிய சில நிமிடங்களில் இருந்து படம் முடியும் வரை விலா நோகச் சிரிக்க வைத்துள்ளனர் ‘சூது கவ்வும்’ குழுவினர்.   ஆட்களைக் கடத்தி, மிரட்டி (!?) பணம் சம்பாதிக்கும் நல்ல கடத்தல்காரர் தாஸ். ஊரை விட்டு சென்னை ஓடி வந்த ஒருவனும், வேலையை இழந்த அவனது இரண்டு நண்பன்களும் தாஸுடன் இணைந்து அமைச்சர் மகனைக் கடத்துகின்றனர். அதன் பின் தாஸ் குழுவினருக்கு என்ன நடந்தது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.   தாஸாக விஜய் சேதுபதி. 2012 […]

04/05/2013 admin
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விமர்சனம் சினிமா

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விமர்சனம்

ஆச்சரியம். ஆனால் உண்மை. ஒரு வழியாக அது நடந்து விட்டது. ஆடல், பாடல், வில்லன், சண்டை, ரத்தம், குத்து வசனங்கள், நகைச்சுவைக்கு தனி நடிகர், அம்மா/தங்கச்சி சென்ட்டிமென்ட், லூசுத்தனமான கதாநாயகி, பழி வாங்குதல், தியாகம் செய்தல், தர்மத்தை காத்தல், அநியாயத்தை அழித்தல், மெஸ்சேஜ் மற்றும் மாறுபட்ட கோணத்தில் காதலை சொல்தல் என்று எதுவுமில்லாத ஒரு படம். அதுவும் தமிழ்ப்படம்.   அடுத்த நாள் தனக்கு திருமணம் என்பதை மறந்து விடுகிறான் ப்ரேம். ஏன் மறந்தான்.. திருமணம் நடந்ததா.. […]

01/12/2012 admin