Shadow

Tag: விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி | பிக் பாஸ் சீசன் 8 – ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு

விஜய் சேதுபதி | பிக் பாஸ் சீசன் 8 – ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு

Teaser, காணொளிகள், சமூகம்
விஜய் டிவியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்குக் கோலாகலமாகத் துவங்குகிறது. சமீபத்தில் மிகப் புதுமையான முறையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், மக்கள் முன்னிலையில் மக்கள் கைகளால் வெளியிடப்பட்ட இந்த பிக்பாஸ் சீசன் 8இன் அசத்தலான ப்ரோமோ, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த ப்ரோமோவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் பற்றி, மக்கள் அறிவுரை சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டு, அசத்தலாகக் களமிறங்கும் விஜய் சேதுபதி, “உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா.., இந்த வாட்டி ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” எனும் டேக் லைனைச் சொல்லி முடிக்கும் ட்ரெய்லர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி களமிறங்குவது, மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல புது ஆச்சரியங்களுடன், புதுப்பொலிவுடன் “பிக்பாஸ் சீசன் 8” பார்வையாளர...
RED FLOWER – காதல் விருந்தளிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர்

RED FLOWER – காதல் விருந்தளிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் RED FLOWER, ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். கதையின் நாயகனாக நடிகர் விக்னேஷ் நடிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன். ரசிகர்களையும் திரையுலகினரையும் மகிழ்வித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி RED FLOWER படத்தின் புதிய பரபரப்பான லுக் போஸ்டரை வெளியிட்டார். இப்படத்தில் விக்னேஷது கதாபாத்திர வடிவமைப்பும், அவரது தோற்றமும் நடிப்பும் நிச்சயம் படம் பார்ப்பவர்களை ஈர்க்கும். அவரது மறுபிரவேசதிற்கு கட்டியம் கூறும்விதமாக இப்படம் அமையும். அவரை மீண்டும் ஒரு முறை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும்வண்ணம் போஸ்டர் அமைந்துள்ளது.ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியுள்ள இப்படம், காதலுக்கு விருந்தாக இருக்கும் என உறுதியளிக்கிறது. காலத்தால் அழியாத காதலை சமகாலக்கூறுகளுடன் கலக்கும் கதைக்களத்துடன...
மகாராஜா விமர்சனம்

மகாராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன்னை மூன்றுபேர்  அடித்துப் போட்டுவிட்டு, தன் வீட்டில் இருந்த லட்சுமியை  தூக்கிச் சென்றுவிட்டார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருகிறார் விஜய் சேதுபதி. லட்சுமி என்பது என்ன, அந்தப் புகாரைக் காவல்துறை ஏன் எடுத்துக் கொள்ள மறுக்கிறது, பின்னர் ஏன் அந்தப் புகாரை எடுத்துக் கொள்கிறது, அந்தப் புகாரின் பின்னால் ஒளிந்திருக்கும்  உண்மை என்ன என்பது தான் இந்த மகாராஜாவின் கதை. கதையை விரிவாகப் பேச முயன்றால் திரைக்கதையின் சுவாரசியங்கள் கெட்டுவிடும் என்பதால், கதை என்ன என்பதைப் பெரிதாக விவாதிக்காமல் காட்சிகளையும், திரைக்கதை யுக்தியையும், கதாபாத்திர வடிவமைப்பையும் பற்றி அதிகமாக விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன். காட்சிகளைப் பற்றிப் பேசத் துவங்கினால், ஒவ்வொரு காட்சியுமே Half Way-இல் துவங்குகிறது. அதாவது ஒரு சம்பவத்தின் பாதியிலிருந்து காட்சி துவங்குகிறது. அதுபோல் ஒரு காட்சி துவங்கு...
“சூரி – மண்ணுக்கேற்ற முகம், கருப்பான அழகன்” – விஜய் சேதுபதி | கருடன்

“சூரி – மண்ணுக்கேற்ற முகம், கருப்பான அழகன்” – விஜய் சேதுபதி | கருடன்

சினிமா, திரைச் செய்தி
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'கருடன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கருடன்' திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்ப...
விஜய் சேதுபதி | ACE – டைட்டில் டீசர்

விஜய் சேதுபதி | ACE – டைட்டில் டீசர்

Teaser, காணொளிகள், சினிமா
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஏஸ் (ACE)' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஏஸ்' எனும் திரைப்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கோவிந்தராஜ் கவனித்திருக்கிறார். கமர்சியல் அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 7Cs என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இப்பட...
உள்ளாட்சித் தேர்தல் அரசியலைப் பேசும் விஜயகுமாரின் “எலெக்‌ஷன்”

உள்ளாட்சித் தேர்தல் அரசியலைப் பேசும் விஜயகுமாரின் “எலெக்‌ஷன்”

சினிமா, திரைத் துளி
'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை முன்னணி நட்சத்திர நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'எலக்சன்'. இதில் விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'அயோத்தி' படப் புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். இவர்களுடன் நடிகை ரிச்சா ஜோஷி, நடிகர்கள் 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத, மகேந்திரன் ஜெயராஜு ...
மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

இது புதிது, திரை விமர்சனம்
கிறிஸ்துமஸ் பிறக்க இருக்கும் நள்ளிரவு நேரத்தில் தன் நான்கு வயது மகளைக் கூட்டிக் கொண்டு பம்பாய் நகர வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறாள் படத்தின் நாயகியான மரியா (கத்ரீனா கைஃப்).  எப்படி தன் மகன் இயேசு பிரானை ஏரோது மன்னனின் கொலைக்களத்தில் இருந்து காப்பாற்ற மரியாளும் யோசேப்பும் முயன்று அந்த நடு இரவில் ஒடிக் கொண்டு இருந்தார்களோ, அதே போல் தன் மகளின் நன்மைக்காக இந்த மரியாவும் தன்னந்தனியே ஒடிக் கொண்டிருக்கிறாள்.  இந்த மரியாவின் மகளுக்கு அப்படி என்ன ஆபத்து வந்தது; தன் மகளைக் காக்க மரியா எடுத்த நடவடிக்கை என்ன என்பதே இந்த “மெரி கிறிஸ்துமஸ்” திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை.ஒரு திரைப்படத்தில் நாம் எதிர்பார்க்கின்ற திருப்பங்களும்  எதிர்பார்க்கும் திரைக்கதையும் இருக்கும் போது,  பல தருணங்களில் சோர்வாகவும் எரிச்சலாகவும் இருக்கும்.  சில தருணங்களில் கதை போகும் போக்கை கச்சிதமாக கணித்துவிட்டோம் என்கின்ற ...
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரீனா கைஃப் ஜோடியாக நான் நடித்திருக்கிறேன் என்பதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை – விஜய் சேதுபதி

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரீனா கைஃப் ஜோடியாக நான் நடித்திருக்கிறேன் என்பதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை – விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மெரி கிறிஸ்மஸ்'. இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது.இதை முன்னிட்டு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன்...
ஜவான்- விமர்சனம்

ஜவான்- விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் கமர்ஸியல் இயக்குநர்களின் திரைப்படங்கள் இவைகளில் நாம் கேட்கக்கூடாத கேள்வி கதை என்ன என்பது.  ஏனென்றால் பெரும்பாலும் அது ஒரே கதை தான்.  நல்வழியில் செல்லும் நாயகனின் வாழ்க்கையை தீய வழியில் செல்லும் வில்லன் சிதைப்பான். ஹீரோ மீண்டு வந்து பழிவாங்குவார்.  சில சமயங்களில் ஹீரோ பழிவாங்கத் தவறினால் அவரின் மகன் வந்து பழி வாங்குவார்.  இதன் வகையறாக்கள் அப்பாவும் மகனும் சேர்ந்து பழி வாங்குவது, அப்பாவிற்காக மகன் பழி வாங்குவது, மகனுக்காக அப்பா பழி வாங்குவது என உலக சினிமா வரலாறு தொடங்கியதில் இருந்து இது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.  உதாரணத்திற்கு நம் இயக்குநர் அட்லியின் படங்களில் முதல் படமான ‘ராஜா ராணி’யை மட்டும் விட்டுவிட்டு பிற படங்களைப் பாருங்கள்.’தெறி’ தன் குடும்பத்தை சிதைத்தவனைப் பழி வாங்கும் ஹீரோ. “மெர்சல்’  தன் அப்பா அம்மாவை கொன்றவனை பழி வாங்கும் மகன்(கள்...
‘தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’ – ஷாருக் கான்

‘தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’ – ஷாருக் கான்

சினிமா, திரைச் செய்தி
ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு  முன்னதான விளம்பரப்படுத்தும்  நிகழ்வு சென்னையில்  பிரமாண்டமாக  நடைபெற்றது.சென்னையில்  உள்ள  தனியார்  கல்லூரி  வளாகத்தில்  அமைந்திருக்கும் கலை  அரங்கில்  ஆயிரக்கணக்கான  மாணவ,  மாணவிகள்  மற்றும் ரசிகர்களுடன்  நடைபெற்ற  இந்நிகழ்வில்  படத்தை தமிழகம்  மற்றும்   கேரளாவில்  வெளியிடும்  விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம்  கோபாலன்  உள்ளிட்ட  படக்குழுவினர்  கலந்து  கொண்டனர். இவ்விழாவிற்கு  வருகை  தந்திருந்த  அனைவரையும்  விநியோகஸ்தரான  ஸ்ரீ கோகுலம்  கோபாலன்  வரவேற்றார். இந்நிகழ்வில்  இசையமைப்பாளர்  அனிருத்  பேசுகையில்,  '' என் மீது நம்பிக்கை  வைத்து  எனக்கு  வாய்ப்பளித்த  ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட்  நிறுவனத்திற்கும்,  பூஜா தட்லானி  மற்றும்  கௌரி கான்  ஆகியோருக்கும்  நன்றி.  ப...
“ஹைய்யோடா” பாடலுக்கான டீசர் வெளியீடு

“ஹைய்யோடா” பாடலுக்கான டீசர் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
ஜவான்” படத்தின்  மீதான  எதிர்பார்ப்பு  உச்சம்  தொட்டிருக்கும்  இந்த வேளையில் “வந்த இடம்” பாடல்,  விஜய் சேதுபதி மற்றும் நயன் தாராவின் தோற்றத்துடன் கூடிய போஸ்டர் வெளியீடு, #AskSRK நிகழ்வு, SRK UNIVERSEன் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் 52 நகரங்களில் வெளியிடல் கொண்டாட்டம் , வந்த இடம் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிட்டது ஆகியவற்றின் மூலம் “ஜவான்” படத்தை லைம் லைட்டிலேயே வைத்திருக்கும் படக்குழுவினர் தற்போது அடுத்த அஸ்திரத்துடன் வந்துள்ளனர்.Ask SRK நிகழ்வின் போது ஷாருக்கானிடம் ‘ஜவான்’ படத்தில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது என்று கேள்வி எழுப்பிய போது அவர் “ஹைய்யோடா” என்னும் ரொமாண்டிக் பாடல் தான் இப்படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடலாக அமைந்துள்ளது என்று பதிலளித்திருந்தார். அப்பொழுது  இருந்தே அப்பாடல் மீதான ஃபீவர் ரசிகர்களுக்கு தொற்றிக் கொண்டது.தற்போது  “ஹைய்யோடா” பாடலின் டீசரை வெளியிட்ட...
#AskSRK!   “ஜவான்”தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த ஷாருக்

#AskSRK!   “ஜவான்”தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த ஷாருக்

சினிமா, திரைத் துளி
ஷாருக்கானின்  நடிப்பில்  வெளியாகவிருக்கும், ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பு, பார்வையாளர்களிடையே  தொடர்ந்து  அதிகரித்து  வருகிறது. அதற்கான  ஆதாரமாக   சமீபத்திய  #AskSRK அமர்வு,  இணையம்  முழுக்க வைரலாகி வருகிறது.  ஷாருக்கான்  தனது  ரசிகர்களுடன் #AskSRK   எனும் ஹேஸ்டேக்கில்,  ட்விட்டரில்  தொடர்பு கொள்வதால்,  அவருடன்   ரசிகர்கள் உரையாடுவது,  உண்மையில்  ஒரு  பெரிய  விருந்தாக  அமைந்துள்ளது. மேலும்  முன்னெப்போதும்  இல்லாத  அளவு  ஷாருக்கானின்  ஜவான் திரைப்பட எதிர்பார்ப்பு  உச்சகட்டத்தை  எட்டியுள்ளது.  ஷாருக்கானிடம் படத்தின்  கதையைக்  கேட்பது  முதல்,  அவரது  கதாபாத்திரம்  குறித்து கேட்பது  வரை,  நெட்டிசன்கள்  சமூக  வலைதளங்களில்  படம்  குறித்த தங்கள்  ஆர்வத்தை  வெளிப்படுத்தி  வருகின்றனர். #AskSRK  டிவிட்டர்  அமர்வில்  SRK  தனது ரசிகர்களுக்கு பதிலளிக்கத் தொடங்கியவுடன்,  ...
“ஜவான்” போஸ்டரில் மிரட்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா

“ஜவான்” போஸ்டரில் மிரட்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா

சினிமா, திரைச் செய்தி
 ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரி கான் தயாரிப்பில் “ஜவான்” திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. ’ஜவான்’  தமிழ், தெலுங்கு, இந்தி  ஆகிய  மொழிகளில்  செப்டம்பர்  7ஆம்  தேதியன்று  உலகம் முழுவதும்  திரையரங்குகளில்  வெளியாகிறது.செப்டம்டர் மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே படம் குறித்தான வேறு வேறு தகவல்களும், பாடல்களும்,  முன்னோட்ட வீடியோக்களும் வெளியாகி  உலகமெங்கும் இருக்கும் ஷாருக்கான் யூனிவர்ஸ் ரசிகர்களையும் பொதுமக்களையும்  படம் குறித்தான எதிர்பார்ப்புக்குள் விழ வைத்திருக்கிறது.’வந்த இடம்’ பாடல் வெளியாகி அதில் மீண்டும் இடம் பெற்ற லுங்கி தொடர்பான காட்சிகள் பெரும் பரப்புரையைப் பெற்றதோடு இசைப் பாடல்கள் வரிசையில்  ‘வந்த இடம்’ பாடல் முதல் இடத்தையும் பிடித்தது.. அதைத் தொடர்ந்து SRK...
மீண்டும் மணிகண்டனுடன் இணைந்த ‘குட் நைட்’ தயாரிப்பாளர்கள்

மீண்டும் மணிகண்டனுடன் இணைந்த ‘குட் நைட்’ தயாரிப்பாளர்கள்

சினிமா, திரைச் செய்தி
பெரியஹீரோக்களின் படம் மட்டுமே  தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது குட்நைட்.அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்தபடம் தயாராகிறது. நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் படத்தை தயாரிக்கிறார்கள்.இந்தப்படத்திலும் ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார்.பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இந்தப் புதியபடத்தில் குட்நைட்  மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன் லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக  நடிக்கிறார். கண்ணாரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இசை ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு பரத் விக்ரமன், கலை ராஜ்கமல் பாடல்கள் மோகன்ராஜன்...
விஜய் சேதுபதியைச் சூழும் சுற்றுலாப் பயணிகள்

விஜய் சேதுபதியைச் சூழும் சுற்றுலாப் பயணிகள்

சினிமா, திரைத் துளி
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் தளத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியைச் சந்திக்க மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாப் படத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருடன் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தத் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணி...