Shadow

Tag: விஜய் சேதுபதி

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆந்திராவின் யமசிங்கபுரத்தில் யமதர்மராஜாவைக் குலதெய்வமாக வணங்கித் திருட்டுத் தொழிலைச் செய்யும் திருடர் குலத்தின் தலைவர் விஜய் சேதுபதி. பாண்டிச்சேரியில் ஒரு வீட்டில் திருடும் பொழுது, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தில் நாயகியைப் பார்க்கிறார். சென்னையில் படிக்கும் நாயகியை, நண்பர்களின் உதவியுடன் கல்லூரியிலிருந்து யமசிங்கபுரத்துக்கு கடத்திக் கொண்டு செல்கிறார். கடத்தப்படும் நாயகியை மீட்க கெளதம் கார்த்திக் தன் நண்பன் டேனியலுடன் இணைந்து யமசிங்கபுரத்துக்கு இருவரணிப் படையாகச் செல்கிறார். விஜய் சேதுபதியின் யதார்த்த இயல்புடன் கலந்த நடிப்பு எப்போதும் போல நம்மைக் கவர்கிறது.  நிறுவுமுறைத் திரைப்படத்துக்குத் தகுந்த பாணியில் நடித்துக் கொடுத்திருந்தாலும், தனக்கே உரிய  வித்தியாசமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அவரது உத்தி இப்படத்துக்குக் கைகொடுத்திருக்கிறது. மெளன ராகம் கார்த...
கெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி

கெளதம் கார்த்திக்கைப் பரிந்துரைத்த விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
7சி எண்டர்டெயின்மென்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்'. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுககுமார் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் என்னை யாருமே பாராட்டவில்லை. படத்தைப் பார்த்த எல்லோருமே விஜய் சேதுபதி பற்றி தான் எல்லா இடத்திலும் என்னை விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அவரோடு இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. படத்தில் நான் பேசிய ஒரு வசனம் நிச்சயம் ட்ரெண்ட் ஆகும்னு நம்புறேன்” என்றார் நடிகர் டேனியல். “படத்தில் ஒப்பந்த...
கருப்பன் விமர்சனம்

கருப்பன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாடு அணையும் முரட்டு வீரனான கருப்பனுக்குத் தன் தங்கை அன்புச்செல்வியைத் திருமணம் செய்து வைக்கிறார் மாயி. கண் பார்வையற்ற கருப்பனின் தாயை அன்புச்செல்வி பிரியமாகப் பார்த்துக் கொள்வதால், படிப்பறிவுள்ள தன் பணக்கார மனைவி மீது ஓவர் காதலுடன் இருக்கிறார் படிக்காத ஏழை கருப்பன். அன்புச்செல்வியை ஒருதலையாகக் காதலிக்கும் கதிர் அவர்களைப் பிரித்து விடுகிறான். கருப்பன் மீண்டும் தன் மனைவியுடன் எப்படிச் சேர்ந்தார் என்பதே படத்தின் கதை. வீரம், காதல், வஞ்சம், பிரிவு, துக்கம், சுபம் என கதை ஓட்டம் மிக எளிமையாகவும் பரீச்சயமாகவும் இருக்கிறது. அதனை மீறி சுவாரசியப்படுத்துவது படத்தின் கதைமாந்தர்கள் தான். சிங்கம்புலியைக் கூட ரசிக்கும்படி திரையில் உலவ விட்டுள்ளதே இயக்குநர் பன்னீர் செல்வத்தின் வெற்றி. குடித்து விட்டு எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு சிங்கம்புலியுடன் ஆட்டம் போடும் காட்சி சூப்பர். அது அப்படியே நீண்டு, 'ஆலுமா டோலும...
ஜுங்கா விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி

ஜுங்கா விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி

சினிமா, திரைத் துளி
விக்ரம் வேதாவிற்குப் பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாகத் திரையுலகினர் கருதினர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படம், படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது. இது குறித்து படக்குழுவினர் பேசும் போது, “விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா’வின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு சான்று” என்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சாயிஷா...
விஜய் சேதுபதியின் எடக்கு

விஜய் சேதுபதியின் எடக்கு

சினிமா, திரைத் துளி
எடக்கு எனும் படத்தை, நிமோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் K.பாலு தயாரித்திருக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் S.சிவன். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில், யாரும் எதிர்பார்த்திட இயலாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். இப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் , “விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும். மேலும் இப்படத்தின் திரைக்கதையும் மிக சுவாரசியமாக அமைந்திருக்கிறது. ஏனெனில் இது ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்ட படம். இப்படத்தில் விறுவிறு சண்டைக் காட்சிகளை தவசிராஜ் கடினமாக உழைத்து வடிவமைத்திருக்கிறர். இப்படத்தின் படப்பிடிப்பு சேலம், தர்மபுரி, பெங்களூரு ஹைவேக்களிலும் அதைச் சுற்றிய ஊர்களிலும் நடந்துள்ளது. மிக விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க வெளியாகவுள்ளது” என்றார்....
ஜுங்காவிற்கு ஆசைப்பட்ட விஜய் சேதுபதி

ஜுங்காவிற்கு ஆசைப்பட்ட விஜய் சேதுபதி

சினிமா, திரைத் துளி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா வசூலில் மட்டும் வெற்றி பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களைத் திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த இந்தத் தொழிலையே மீட்டெடுத்தது’ என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்குத் தினமும் ஃபோனிலும் நேரிலும் வாழ்த்து சொல்லியபடியே இருக்கிறார்கள். இருப்பினும் வழக்கம் போல் விஜய் சேதுபதி தன்னுடைய கலைப்பயணத்தை அதேயளவிலான ஆர்வத்துடன் தொடர்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தைத் தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. அதனை, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா-விற்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஜய் சேதுபதி அவர்கள் என்னிடம் கூறியிருந்தார். நான் அப்போது பொ...
விக்ரம் வேதா விமர்சனம்

விக்ரம் வேதா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பு போடும் முன்பே படம் என்ன மாதிரியான ஜானர் என 2-டி அனிமேஷன் மூலம் கோடிட்டுக் காட்டிவிடுகின்றனர் புஷ்கர் - காயத்ரி. அந்த 2டி குறும்படத்தில், வேதாளம் விக்கிரமாதித்யன் தோளைச் சுற்றிக் கொண்டு, ஒரு கதையைச் சொல்லவா எனக் கேட்கிறது. வேதா எனும் ரெளடி புதிர் போட, காவல்துறை அதிகாரி விக்ரம் அதை எவ்வாறு அவிழ்க்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பு ஆச்சரியமூட்டுகிறது. முதல் ஃப்ரேமிலேயே கதை தொடங்கி விடுகிறது. சின்னச் சின்ன வசனங்களிலும் ஆழமாய்ப் புதிராயும் கதை பொதிந்துள்ளது. படம் முடியும் பொழுதுதான், படத்தின் அனைத்துக் காட்சியும் ஒன்றோடு ஒன்று எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளது எனத் தெரியும். மாதவன் தனது நேர்த்தியான நடிப்பால் கட்டுக்கோப்பாய் ரசிகர்களைப் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அசத்தலாக அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. மாதவனின் நேர்த்தியை ரசிப்...
கவண் விமர்சனம்

கவண் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சமமற்ற இருவருக்குள் நடக்கும் சண்டைக்கு, பைபிளில் வரும் கோலியத், டேவிட் கதையை உதாரணம் காட்டுவார்கள். சிறுவனான டேவிட் உண்டிவில் கொண்டு ஆஜானபாகு கோலியத்தை வீழ்த்திவிடுவான். அப்படி, வில்லன் ஆகாஷ்தீப்பின் கார்பொரேட் டி.வி. நிறுவனமான ஜென் 1-ஐத் தகர்க்கிறார் முத்தமிழ் டி.வி. நிருபரான விஜய்சேதுபதி. படத்தின் சர்ப்ரைஸ் விஷயமென்றால், அது பவர் ஸ்டார் வரும் காட்சிதான். முதல் முறையாக, அவர் தோன்றும் காட்சியொன்று ரசிக்கும்படியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அவர் பேசும் வசனமும் துணை புரிந்துள்ளது. எழுத்தாளர்கள் சுபா மற்றும் கபிலன் வைரமுத்துவின் வசனங்கள் படத்திற்கு உதவி செய்துள்ளன. ஆனால், டி.ராஜேந்தர் தான் வழக்கம் போல் இடம் பொருள் ஏவல் பிரக்ஞையின்றி அடுக்கு மொழியில் கடுப்பேற்றுகிறார். எனினும் க்ளைமேக்ஸில், 'வாடா என் மச்சி, வாழைக்காய் பஜ்ஜி' என டேபிளைத் தட்டிக் கொண்டே பாடும் பொழுது திரையரங்கில் ...
கலக்கப் போகும் கவண்

கலக்கப் போகும் கவண்

சினிமா, திரைத் துளி
சவால், காதல், அவமானம், மீண்டெழுதல், கொண்டாட்டம் என மனிதனின் வாழ்வில் நிகழும் அத்தனையையும் தொடும் சுவாரசியமாகப் படமாக இருக்கும் "கவண்". இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக நடிக்கவுள்ளார். மேலும், விஜய் சேதுபதியுடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று டி.ராஜேந்தரும் நடித்துள்ளார். அவரது அடுக்குமொழி வசனமும், அடங்காத நடிப்பும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கப் போகிறது. டி.ஆர் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் அரங்கை அதிரவைக்கப் போகின்றதாம். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். மேலும், பாண்டியராஜன், விக்ராந்த், 'அயன்' ஆகாஷ், போஸ் வெங்கட், 'நண்டு' ஜகன், பவர் ஸ்டார் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். 'கனா கண்டேன்' முதல் இயக்குநர் கே.வி.ஆனந்த் அவர்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் இரட்டை எழுத...
றெக்க விமர்சனம்

றெக்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எத்தனை பேர் வந்தாலும் அடித்து துவம்சம் செய்யக் கூடியவன் சிவா என்பது தான் இந்த 'மாஸ் ஹீரோ' படத்தின் ஒரு வரிக் கதை. ஆனால், சிவாவிற்கு சின்னச் சின்ன சண்டை எல்லாம் போடுவதில் விருப்பமில்லை. அதுக்கும் மேல், பெரிய சண்டைக்குக் காத்துக் கொண்டிருப்பவன். கிறுக்குத்தனமான கதாநாயகியாக திரையில் தோன்ற முகத்தில் குழந்தைத்தனமோ, அப்பாவித்தனமோ மிகவும் அவசியம். இப்படியான க்ளிஷேவை லட்சுமி மேனனைக் கொண்டு உடைத்துள்ளார் இயக்குநர். பாரதி மணிவாசகமாக மேடையில் இருந்து அவர் காட்டும் கம்பீரம் நன்றாக இருந்தாலும், பேசியே இராதவன் ஒருவனுடன் ஊரை விட்டு ஓடத் தயாராக இருக்கும் கொடுமை எல்லாம் நகைச்சுவையாகவும் இல்லாமல் சுவாரசியமாகவும் இல்லாமல் கடுப்பேற்றுகிறது. நாயகியை மிகவும் கவர்ந்த ஒருவனைக் கொல்ல, அவளது தந்தையின் அடியாட்கள் சாரைச் சாரையாய் வருகிறார்கள். சிவா ஆட்களை அவர்களது வாகனத்தோடு பறக்க விடுகிறார். 'வாவ்.. வாட் எ மேன்!' எ...
ஆண்டவன் கட்டளை விமர்சனம்

ஆண்டவன் கட்டளை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லண்டனுக்குச் செல்ல டூரிஸ்ட் விசா இலகுவாகக் கிடைக்க, ட்ராவல் ஏஜென்ட்டின் அறிவுரைப்படி மணமானவர் என பொய்யான தகவலைப் பாஸ்போர்ட்டில் கொடுத்து விடுகிறார் காந்தி. பின், இந்தியாவிலேயே கிடைக்கும் வேலையைத் தக்க வைக்க, இல்லாத மனைவியின் பெயரைப் பாஸ்போர்ட்டில் இருந்து அகற்ற காந்தி படும்பாடு தான் படத்தின் கதை. போலி ஆவணங்கள் பக்காவாக இருந்தும், காந்தி சொல்லும் ஒரே ஒரு உண்மை அவருக்கு விசா கிடைக்க விடாமல் செய்து விடுகிறது. பிறகு சொன்ன பொய்யை, சரி செய்ய நினைக்கையில் பொய்ப் பொய்யாய்ச் சொல்ல வேண்டிய நிலை உருவாகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், பொய்ச் சோதனையைக் காந்தியால் தாங்க முடியவில்லை. நெட்வொர்க்காய் ஏய்த்து வாழும் சாமானியர்களோடு சாமானியராய் முழி பிதுங்கும் காந்தி, ‘ஷ்ஷ்ப்பாஆஆ.. என்னை விட்டுடுங்கடா. நான் உண்மையையே பேசிச் சமாளிச்சுக்கிறேன்’ என மகாத்மாத்துவம் எய்துவது தான் படத்தின் உச்சக்கட்டம். காந்தியாக விஜய்...
தர்மதுரை விமர்சனம்

தர்மதுரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரும் பலம் பொருந்திய அமைப்புகளான குடும்பமும் சமூகமும் தனக்கெனப் பிரத்தியேகமான சில விதிமுறைகளை வைத்துள்ளன. அது, தனி நபர்களால் மீறப்படும் பொழுது, அமைப்பின் கண்ணுக்குத் தெரியா அதிகாரம் தனி நபர் விருப்பத்தை நசுக்க முயற்சி செய்யும். தனி நபரான தர்மதுரை, அவ்வமைப்புகளிடம் சிக்கி எப்படி மீள்கிறான் என்பதே படத்தின் கதை. காமராஜ் எனும் மருத்துவப் பேராசிரியராக ராஜேஷ் நடித்துள்ளார். முனியாண்டி என்ற இயற்பெயர் கொண்டவர், காமராஜரின் சத்துணவுத் திட்டத்தால் பயன்பெற்றவர் என்ற நன்றிக்காகத் தன் பெயரையே மாற்றிக் கொள்கிறார். ராஜேஷின் முதுகுக்குப் பின், 'முனியாண்டி' என சில மாணவர்கள் கத்துகின்றனர். அதனால் சுர்ரெனக் கோபம் வந்து விடுகிறது அமைதியை விரும்பும் சக மாணவரான தர்மதுரைக்கு. கத்திய ஹஸனின் மண்டையை உடைத்து விடுகிறார். முனியாண்டி என்ற பெயரோ, கபாலி என்ற பெயரோ உச்சரிக்கப்படக் கூடாத கேலிக்குரிய பெயரா என்ன!? 'ஹஸன் தா...