வெப்பன் – சூப்பர் ஹ்யூமன் ஆக்ஷன் படம்
குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
படத்தொகுப்பாளர் கோபி, “சூப்பர் ஹ்யூமன் கான்செப்ட்டோடு இந்தப் படம் வந்திருக்கிறது. வழக்கமான நக்கல், நையாண்டி எதுவும் இல்லாத இளமையான சத்யராஜ் சாரை இந்தப் படத்தில் பார்க்கலாம். விஷூவலாகப் படம் நன்றாக இருக்கும். தமிழ் சினிமாவில், அடுத்த கட்டத்திற்கான நகர்வாக வெப்பன் படமிருக்கும். வித்தியாசமான ஜானரில் படம் உங்களுக்குப் புது அனுபவத்தைக் கொடுக்கும்” என்றார். இயக்குநர் எழில், “சினிமாவை நேசிக்கக் கூடிய தயாரிப்பாளர்களின் படம் இது என்று சொல்லலாம். செட் எல்லாமே ‘பாகுபலி’ படத்திற்கு இணையாகப் பிரம்மாண்டமாக இருந்தது" என்றார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “விஜய...