Shadow

Tag: ஷங்கர்

இயக்குநர்  ஷங்கரின் மகள் திருமண வரவேற்பில் நடனமாடி கலக்கிய ரன்வீர் சிங்

இயக்குநர் ஷங்கரின் மகள் திருமண வரவேற்பில் நடனமாடி கலக்கிய ரன்வீர் சிங்

சினிமா, திரைச் செய்தி
இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பல முக்கிய பிரபலங்கள்  புடைசூழ நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்  தமிழ் சினிமாத் துறை தவிர்த்து, தெலுங்கு, மலையளம், கன்னடம்  மற்றும் ஹிந்தி திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர் நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி மணமக்களை உற்சாகப்படுத்தினார். டிரம்ஸ் சிவமணி இசைக்க நடனமாடிய ரன்வீர் சிங்குடன் மணமக்கள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர், இயக்குனர் அட்லி ஆகியோரும் சேர்ந்து சந்தோசமாக  நடனமாடி நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.இதனால் உற்சாகம் அடைந்த மணம...
“பாரதிராஜா அருகில் உட்காரத் தகுதியானவர் வெற்றிமாறன்” – இயக்குநர் லிங்குசாமி

“பாரதிராஜா அருகில் உட்காரத் தகுதியானவர் வெற்றிமாறன்” – இயக்குநர் லிங்குசாமி

சினிமா, திரைச் செய்தி
ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடலாசிரியர் சிநேகன், “ஜிவி சாருடன் சேர்ந்து நிறைய படங்களில் பயணப்பட்டிருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகி இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்குப் பாடல் எழுதும்போது வரிகளை ரசிக்கும் இசையமைப்பாளர் இருந்தால் எழுதுவதற்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். அப்படியான ஒருவர்தான் ஜிவி. இந்தப் படத்தின் பாடல்களும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இயக்குநர் ஷங்கர் அவ்வளவு ஒற்றுமையுடன் அணியை எடுத்துச் சென்றார். ஜிவி பிரகாஷ் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் அடுத்தடுத்த உயரத்திற்குச் செல்வார்” என்றார். இசையமைப்பாளர் ரேவா, “ 'கள்வன்' படம் எங்கள் எல்லோருக்குமே ஸ்பெஷல் படம். என்னை நம்பி இசையமைக்க வா...
2.0 எனும் அதி பிரம்மாண்டம்

2.0 எனும் அதி பிரம்மாண்டம்

சினிமா, திரைச் செய்தி
300 கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படம், 550 கோடிக்கு நீண்டுவிட்டது என்கிறார் ரஜினி. ஆனாலும், படம் அதனை வசூலித்துவிடும் என்கிறார் ரஜினி மிக நம்பிக்கையுடன். படத்தொகுப்பாளர் ஆண்டனி, மூன்று முறை எடிட்டிங் செய்துள்ளார். ஒன்று, அனிமேஷன் வடிவிலான ப்ரீ-விஷுவலைசேஷன்; இரண்டு, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல்; மூன்றாவது, விஷுவல் எஃபெக்ட்ஸ்களுடன் என மொத்தம் மூன்று முறை முழுப் படத்தையும் தொகுத்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அப்படியே! படம் தொடங்கும் முன் ஒருமுறை, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல் மற்றொரு முறை, தற்போது, அட்டகாசமான விஷுவல் எஃபெக்ட்ஸ்களுக்கு ஈடு செய்யும் வகையில் இசையமைத்து வருகிறார். உலகத்திலேயே முதல் முறையாக, செளண்ட் டிசைனிங்கில் 4டி (4D - SRL) தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தியுள்ளார் ரசூல் பூக்குட்டி. உபயோகப்படுத்தியுள்ளார் என்பதை விட, உருவாக்கியுள்ளார் என்பதே சரி. தங்களது புதிய பரிமாணத்திற்...
ஐ விமர்சனம்

ஐ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்றாகிவிட்டது. அதை ஐ படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார். தியாவுக்கும் லிங்கேசனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், லிங்கேசனின் அழகையும் உடற்கட்டையும் ஐவர் கூட்டணி இணைந்து உருக்கலைக்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அந்நியன் அம்பி கூவக்கரையில் பிறந்தால் எப்படியிருக்கும்? அதுதான் லீ எனும் லிங்கேசன். ஆனால் விக்ரமுக்கு சென்னைத் தமிழ்தான் கொஞ்சம் ஒட்டவில்லை. கட்டுடல், மெல்லுடல், கோர முகமென விக்ரம் அபிரிதமான உழைப்பைக் கொட்டியுள்ளார். சுமார் இரண்டே முக்கால் வருட தவம் இவருக்கு! எல்லாத் தவத்திற்கும் வரம் கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டமான விஷயம். அந்நியனில், மல்டிபிள் பெர்ஸனாலிட்டி செய்த வேலையை இப்படத்தில் நாயகியும் வில்லன்களும் செய்கின்றனர். அம்பியை நாயகியே ரெமோவாக்குகிறாள்; வில்லன்கள் அந்நியன் ஆக்குகின்றனர். தியாவாக எமி ஜாக்சன். ஷங்க...