Shadow

Tag: ஷாம்

என் முதல் தீபாவளி – நடிகர் ஷாம்

என் முதல் தீபாவளி – நடிகர் ஷாம்

சினிமா, திரைத் துளி
திருமணமான புதுமணத் தம்பதிகளைப் போல திரையுலகக் கதாநாயகர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அந்தத் தீபாவளிக்கு அவர்கள் நடித்த படம் வந்தால் அவர்களுக்கு அது தலை தீபாவளியைப் போன்ற மகிழ்ச்சி தரும். அந்த வகையில் எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை எதிர்கொள்கிறார் நடிகர் ஷாம். அவரது உற்சாக எதிர்பார்ப்புக்குக் காரணம், அவர் நடித்த, 'ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்' என்ற கன்னடப் படம் தீபாவளி அன்று வெளியாகிறது. இப்படத்தில் கதாநாயகனாக அங்கே முன்னணிக் கதாநாயகனான யஷ் நடித்துள்ளார். நாயகியாக வருகிறவர் ராதிகா பண்டிட். இதுவரை நாயகனாக நடித்து வந்த ஷாம், அப்படத்தில் எதிர் நாயகனாக நடித்திருக்கிறார். அதுவும் முழு நீள வில்லனாக நடித்துப் படத்தின் எடையில் சரி பாதியைச் சுமந்து இருக்கிறார். பட அனுபவம் பற்றி ஷாம் பேசத் தொடங்கும் போதே பேச்சில் உற்சாக வெள்ளம் அலையடிக்கிறது, "நான் '6' படம் வெளியா...
புறம்போக்கு என்கிற பொதுவுடமை விமர்சனம்

புறம்போக்கு என்கிற பொதுவுடமை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆறாண்டுகளுக்கு பிறகு வந்துள்ள எஸ்.பி.ஜனநாதனின் படம். அந்த எதிர்பார்ப்பைத் துளியும் ஏமாற்றாமல் அசத்தியுள்ளார். மக்கள் விடுதலைக்காகப் போராடி இறந்த அனைத்து தோழர்களுக்கும் இப்படத்தைச் சமர்ப்பிக்கிறார். பாலுச்சாமி எனும் கம்யூனிஸ்ட்க்கு, தேசத் துரோகக் குற்றத்துக்காக மூன்று தூக்கு தண்டனையை அறிவிக்கிறது இந்திய அரசு. தூக்கு தண்டனையை நிறைவேற்ற, சிறை அதிகாரியான ஏ.டி.ஜி.பி. மெக்காலே ஐ.பி.எஸ். வசம் ஒப்படைக்கப்படுகிறார் பாலுச்சாமி. தீர்ப்பின்படிபாலுச்சாமியைத் தூக்கிலிட, எமலிங்கம் எனும் ஹேங்மேனின் உதவி தேவைப்படுகிறது. எமலிங்கத்தின் உதவி கிடைத்ததா? பாலுச்சாமிக்கு தண்டனையை மெக்காலே நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான் கதை. விறைப்பான காவல்துறை அதிகாரி மெக்காலேவாக ஷாம். மிகப் பொலிவாய், கம்பீரமாய் உள்ளார். சிறைக்குள் எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டுமென உறுதியாக இருக்கும் நேர்மையான காவல்துறை அதிகாரி. தூக்கு தண்...