Shadow

Tag: ஹரி – ஹரீஷ்

யசோதா விமர்சனம்

யசோதா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தங்கையின் மருத்துவச் சிகைச்சைக்காக, வாடகைத்தாயாகச் செல்கிறாள் யசோதா. உடனிருக்கும் வாடகைத்தாய்கள் திடீர் திடீரெனக் காணாமல் போக, அனுமதி மறுக்கப்பட்ட ஜோன் 2-க்குள் சென்று பல அதிர்ச்சிகரமான ரகசியங்களைப் பார்த்துவிடுகிறார். அது என்ன ரகசியம் என்பதும், அது அவருக்கு எத்தகைய ஆபத்தினைக் கொண்டு வருகிறது என்பதுதான் படத்தின் கதை. மருத்துவர் கெளதமாக உன்னி முகுந்தனும், மருத்துவர் மதுபாலாவாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். யூகிக்க முடிந்த திருப்பங்களுக்கே இவ்விரண்டு கதாபாத்திரங்களும் உதவியுள்ளனர். அவர்களது ஃப்ளாஷ்-பேக் கிளைக்கதை நன்றாக இருந்தாலும், சமந்தாவைக் கட்டிப் போட்டுவிட்டு பள்ளிக் குழந்தைகள் போல் ஒப்பிப்பது எல்லாம் திரைக்கதைக்கு இழுக்கு. தனிக்கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார். நாயகிக்கான ஆக்ஷனைக் கதை தான் என்றாலும், யசோதா முழுத் திருப்தியை அளிக்கவில்லை. ஒரு ஹாலிவுட் நடிகையின் மரணம், இந்திய...
ஜம்புலிங்கம் 3டி விமர்சனம்

ஜம்புலிங்கம் 3டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜப்பானில் கடத்தப்படும் பேபி ஹம்சியைத் தமிழக இளைஞனான ஜம்புலிங்கம் எப்படி மீட்டு அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கிறான் என்பதே படத்தின் கதை. கதை ஜப்பானில் நிகழ்வதால், ரஜினிக்கு ஜப்பானில் இருக்கும் புகழைப் படத்தில் காட்டியுள்ளனர். அதை இன்னும் சுவாரசியமாக்கியிருக்கலாம். சிட்டி 'தி ரோபாட்'டாக லொள்ளு சபா ஜீவா வருகிறார். சகுனம் எனும் பாத்திரத்தில் ஈரோடு மகேஷ் நடித்திருக்கிறார். டான் டேவிட் சகுனத்தைத் தன்னுடன் கை விளங்கால் பிணைத்துக் கொண்டு குளியலறை, படுக்கையறை என இழுத்துக் கொண்டு போகிறார். கலை ஆர்வலர் டான் டேவிடாக ஒகிடா எனும் ஜப்பானியர் நடித்துள்ளார். ஐரீன் எனும் பாத்திரத்தில் அஞ்சனா கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். ஜம்புவால் கவரப்பட்டு, அவனைக் காதலிக்கும் பாரம்பரிய பாத்திரத்தில் வருகிறார். பரதநாட்டியக் கலைஞராகவும், ஹம்சிகாவின் அம்மாவாகவும் நடித்துள்ளார் சுகன்யா. ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களைத...
ஆ விமர்சனம்

ஆ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேய் இருக்கா இல்லையா? இருக்கு என நிரூபித்தால் 60 கோடி ரூபாய் வெல்லலாம் என மூன்று நண்பர்களுக்கு பந்தயம் வைக்கிறான் பிராஸ்பர். தமிழ், செர்ரி, சிங்காரம் ஆகிய மூவரும் பேயை வீடியோவாக பதிவு செய்ய செய்து பந்தயத்தில் வெல்ல முனைகின்றனர். என்ன முயற்சி செய்கிறார்கள், பந்தயத்தில் வென்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. அம்புலியாக நடித்த கோகுல்நாத்க்கு நாயகனாக பிரமோஷன் தந்துள்ளனர் இரட்டை இயக்குநர்கள் ஹரி ஷங்கரும் ஹரீஷ் நாராயணனும். பிரபல டி.வி. சேனல்கள் வாயிலாக தனது அவிநயக்கூத்தின் (mime) மூலமாகப் பிரபலமடைந்தவர் கோகுல். அவருக்கு தீனி போடும் விதமாக கானா பாலாவுடன் இணைந்து அவர் ஆடும் அறிமுகப் பாடல் அமைந்துள்ளது. பின் படத்தின் போக்கிற்கு இணையும் கதாபாத்திரமாக மாறிவிடுகிறார் கோகுல். செர்ரியாக மேக்னா நடித்துள்ளார். எப்படியாவது பந்தயத்தில் ஜெயித்து 20 கோடி ரூபாயை அடைய நினைக்கும் பாத்திரத்தில் கச்சிதம...
அம்புலி விமர்சனம்

அம்புலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அம்புலி - நிலா என பொருள்படும். இரவில் மட்டுமே தோன்றி உயிர்களை வேட்டையாடும் மிருகம் போன்ற மனிதனைக் குறிக்கும் காரணப் பெயராக தலைப்பை வைத்துள்ளனர். ஸ்டிரியோ-ஸ்கோபிக் முறையில் எடுக்கப்பட்ட முதல் முப்பரிமாண தமிழ்ப் படம் என்பது அம்புலியைப் பற்றிய விசேடமான செய்தி. தேர்வாழி கிராமத்தில் நடந்த விநோதமான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதையின் கருவை அமைத்திருப்பதாக தெரிகிறது. ஒருவழியாக தனது காதலை இரண்டு வருடங்களிற்குப் பிறகு பூங்காவனத்திடம் சொல்லி விடுகிறான் அமுதன். அவன் காதலைத் தெரிவித்த நாள் முதல் கல்லூரி இரண்டு மாதங்களுக்கு விடுமுறை என்பதால், பணக்கார வீட்டுப் பையனான அமுதன் காதலியைச் சந்திக்க கல்லூரி விடுதியிலேயே தங்க முடிவு செய்கிறான். அதற்கு அமுதன் அவனுடைய நண்பன் பார்வேந்தனின் உதவியை நாடுகிறான். கல்லூரி காவலாளி (வாட்ச்-மேன்) ஆன வேந்தனின் தந்தை வேதகிரி்யும் அமுதன் தங்குவதற்கு சம்மதிக்கிறார். அன்றிர...