
‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்
பிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ். கிருஷ்ணனின் அடியாத்தே என்ற ஒற்றை வீடியோ பாடலை முன்னணி இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ட்விட்டரில் வெளியிட்டார். இப்பாடலை சுவாகதாவுடன் இணைந்து டி. ல்சத்திய பிரகாஷ் பாடியிருக்கிறார்.
கரு / தியா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆலாலிலோ’, பார்ட்டி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜிஎஸ்டி’, மற்றும் காற்றின் மொழி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டர்ட்டி பொண்டாட்டி’ உள்ளிட்ட பல துள்ளலான பாடல்களைப் பாடி ரசிகர்களை வென்ற இளம் பாடகி சுவாகதா, முதன்முறையாக ஒரு ஒற்றை வீடியோ பாடலை இசையமைத்து, பாடி, நடித்து, தயாரித்தும் வெளியிட்டிருப்பதன் மூலம் ஒரு இசை வீடியோ தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்.
தனது முதல் குரு திருமதி விஜயலக்ஷ்மி ராமசேஷன் எனக் கூறும் சுவாகதா, தனது சிறு வயது முதலே அவரிடம் கர்நாடக இசையைப் பயின்றிருக்கிறார். பொறியியல் பட்டதாரியான சுவாகதா இசையின் மீ...

