
சர்கார் விவகாரத்தில் அதிமுகவினரின் அடாவடி கண்டிக்கத்தக்கது – கருணாஸ் காட்டம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையைக் கிளப்பித் திரையரங்கப் பதாகையைக் கிழித்துப் போராட்டம் செய்து வருகின்றனர் ஆளுங்கட்சி அ.தி.மு.க.,வினார். இது வன்முறையான கண்டிக்கத்தக்க அநாகரிகச் செயலாகும்.
சர்கார் திரைப்படம் முறையாகத் தணிக்கை செய்யப்பட்டுத் தணிக்கைக் குழுவின் ஆட்சேபணையின்றி வெளிவந்த வேலையில் அத்திரைப்படத்தில் உள்ள காட்சிகளையும், வசனங்களையும் நீக்கச் சொல்லிப் போராடுவது சட்டவிரோதச் செயலாகும்.
அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் விரும்பியடிதான் படம் எடுக்க வேண்டுமென்றால், அதைத் தணிக்கைக்குழு விரும்பாத படமாகத்தான் படம் எடுக்க முடியும். இவர்கள் யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.
கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, “வீட்டுக்குள் புருஷங்காரன் பொண்டாட்டிய அடிக்கத் திண்னையில் கிடக்கிறவன்...


