Shadow

Tag: இசையமைப்பாளர் தென்மா

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதல், நெருக்கம், பாலினப்பண்பு முதலியவற்றை மையமாகக் கொண்டு ஓவியம் தீட்டுவதில் வல்லவரான 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆஸ்திரிய ஓவியர் குஸ்தாவ் க்ளிம்ட் (Gustav Glimt) -இன் மிகவும் புகழ்பெற்ற ஓவியமான The Kiss இலிருந்து படத்தின் ஃப்ரேம் தொடங்குகிறது. படத்தின் மையமும், காதல், நெருக்கம், பாலினப்பண்பு ஆகியவற்றைச் சுற்றியே! இனியனின் அறைச்சுவரில், 'தி கிஸ்' ஓவியமும், பின்னணியில், கறுப்பினப் பெண்மணியான நினா சிமோனின் (Nina Simone) பாடலும் ஒலிக்கிறது. பாடகியும், இசையமைப்பாளருமான நினா சிமோன் ஒரு சமூகச் செயற்பாட்டாளரும் கூட! அதாவது, இனியன் என்பவர் நவீனத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்ட முற்போக்காளன் என்றறியலாம். தனது இசையின் மூலமாகவும், பிரபல்யத்தின் மூலமாகவும், சமூக உரிமைகளுக்காகப் போராடிய நினா சிமோனோடு ஒப்பிட்டு, இளையராஜாவின் அரசியல் நிலைப்பாட்டின் மீது விமர்சனம் உள்ளவன் இனியன். அவனது காதலியான ரெனே, இனியனி...
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஒரு கற்பனைக் கதை. ஆனால், இந்தக் கதையில் காட்டப்படும் டாக்குமென்ட்ரியில் நிகழ்வது போல் நடப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ள மெத்தனமான நாடு இந்தியா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கடல்நீரில் கலந்த எண்ணெயை வாளியில் அள்ளும் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்த அரசாங்கம், கரை ஒதுங்கும் ஆபத்தை விளைவிக்கும் குண்டை, வெடிக்கும் குண்டு என ஒத்துக் கொள்வதற்கே அதன் வெட்டி கெளரவம் இடம் கொடுக்காது. ஏன் உலகிற்கு இத்தனை குண்டுகள், இத்தனை உயிரிழுப்புகள் என்ற கேள்வியை மிக அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது சடோகா சசாகியின் கதை. ஆனால், தினேஷ் வசமிருக்கும் குண்டு வெடித்து விடக் கூடாது என்ற பதைபதைப்பை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது படம். அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவல், தோழர் ரித்விகாவிற்கு அதிகமாக உள்ளதே தவிர, அதை வெடிக்கவிடாமல் செய்ய என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்றெல்லாம் அவர் யோசிப்பதில்லை. கு...