Shadow

Tag: இயக்குநர் சுஜீத்

சாஹோ விமர்சனம்

சாஹோ விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சாஹோ என்றால் 'வெற்றி உனதே!' எனப் பொருள்படும் என பிரபாஸ் பேட்டியில் கூறியுள்ளார். எந்த மொழியில் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் சித்தாந்த் நந்தன் சாஹோ என்பதே படத்தின் தலைப்பிற்கான காரணம் என முடிவுக்கு வந்துவிடலாம். இந்திய அரசாங்கத்தின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டுக்கூடிய ராய் எனும் மிகப் பெரும் தொழிலதிபர் கொல்லப்படுகிறார். அவரை யார் கொன்றார்கள், ராய் வகித்த பதவிக்கு எவரெல்லாம் ஆசைப்படுகிறார்கள், ராயிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் என்னானது என்பதுதான் படத்தின் கதை. கே.ஜி.எஃப், லூசிஃபர் போன்ற படங்கள் தமிழ் மார்க்கெட் மீது குறி வைத்து மேக்கிங்கில் மெனக்கெட, 'பாகுபலி பிரபாஸ் நடித்த 350 கோடி ரூபாய் பட்ஜெட்டுடைய படம்' என்றால் மட்டும் போதாதா என்ற மெத்தனத்துடன் களமிறங்கியுள்ளார் இயக்குநர் சுஜீத். படத்தின் தொடக்கம் ஓர் எதிர்பார்ப்பைத் தூண்ட...
சாஹோ: ஹாலிவுட்டிற்கான பாலம் –  உண்மையெது பொய்யெது?

சாஹோ: ஹாலிவுட்டிற்கான பாலம் – உண்மையெது பொய்யெது?

சினிமா, திரைச் செய்தி
சாஹோ படத்தில் வரும் மூன்று பிரம்மாண்டமான பாடல்களும், கண்களைப் பறிக்கும் அளவிற்கு காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது. இதன் அறிமுக விழாவில் சாஹோ படக்குழிவினர் பிரபாஸ், தயாரிப்பாளர் பிரமோத், மதன் கார்கி மற்றும் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மதன் கார்க்கி, “பிரபாஸ் உடன் பாகுபலி படத்தில் பணியாற்றியதே எனக்கு மிகுந்த சந்தோஷாத்தைக் கொடுத்தது. மீண்டும் தற்பொது பிரபாஸுடன் பணியாற்றியது எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். பாடல்களை மொழிபெயர்ப்பு செய்யாமல், புது வரிகளுக்கு எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்த இயக்குநர் சுஜீத் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குத் தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்த பாடல் 'மழையும் தீயும்' என்ற பாடல். இதில் மாறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காகக் கதாநாயகனைத் தீயாகவும், கதாநாயகியைத் தண்ணீராகவும் சித்தரித்திருக்கிறேன். பிங்க் நிறத்...