Shadow

Tag: இயக்குநர் சுரேஷ் சங்கையா

கெணத்த காணோம் விமர்சனம்

கெணத்த காணோம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழில் அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர் தண்ணீர்’ நாவல் தாகத்தின் உச்சத்தை வெளிப்படுத்திய தண்ணிகரற்ற ஒரு படைப்பாகும். மேலும் தண்ணீர் தண்ணீர் என்ற பழைய திரைப்படமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக தாகத்தை முன் வைத்த படைப்புகள் என்றாலே ஓர் உணர்ச்சிகரமான பிணைப்பு ஏற்படும். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா தண்ணீருக்கான தாகத்தை மையப்படுத்தியே இந்தத் திரைக்கதையை எழுதியுள்ளார். மூலக்கதை நடிகர் ஆறுபாலா கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிறு கிராமம் ஒன்றில் கோவில் பூசாரியாக இருக்கிறார் யோகிபாபு. அவர் தன் காதலியைக் கரம்பிடிக்க வேண்டும் என்ற தாகத்தில் தவிக்க, ஒருபுறம் ஊரே தண்ணீர் வேண்டித் தவிக்கிறது. இச்சூழலில் யோகிபாபுவின் வீட்டின் முன் கிணறு தோன்றினால் தண்ணீர் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நிலை வருகிறது. யோகிபாபுவும் ஊருக்காகச் சம்மத...
கெணத்த காணோம் | யோகிபாபுவின் கொடை

கெணத்த காணோம் | யோகிபாபுவின் கொடை

சினிமா, திரைச் செய்தி
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்" ஆகும். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சுசீந்திரன், "ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலம் அற்புதமான வாழ்வியலைச் சொன்னவர் இயக்குநர். இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. எனினும், இயக்குநர் இந்தப் படத்திலும் அழகான வாழ்வியல் சார்ந்த கதையைக் கையாண்டிருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கும் ரமேஷ் பாபு சாருக்கு வாழ்த்துக்கள். சிறிய பட்ஜெட் என்றாலும், நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் யோகி பாபு, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் மட்டுமே நடிப்பில் கவனம் செலுத்தி வரும் லவ்லின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, எந்த பட்ஜெட் படமென்றாலும் தனது உழைப்பைப் பலமடங்கு கொடுக்க...
ஒரு கிடாயின் கருணை மனு விமர்சனம்

ஒரு கிடாயின் கருணை மனு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முதல் ஃப்ரேம் முதல் கடைசி ஃப்ரேம் வரை நேட்டிவிட்டி மாறாமல் நகைச்சுவையாக அதகளப்படுத்தியுள்ளனர். 35 வயதில் தன் பேரனுக்குத் திருமணமானதற்காக முனியாண்டிக்குக் கிடாய் ஒன்றை நேர்த்திக் கடனாகப் பலி கொடுக்க வேண்டிக் கொள்கிறார் ஒரு கிராமத்துப் பாட்டி. உற்றார் உறவினர் புடை சூழ, புது மணத் தம்பதியருடன் தடபுடலாகக் கிராமத்திலிருந்து கிடாய், சேவல்களுடன் லாரி புறப்படுகிறது. வழியில், எதிர்பாராத விதமாய் நேரும் விபத்தால் ஒரு உயிர் பலி நேர்ந்து விடுகிறது. அதிலிருந்து கிடாய் வெட்டச் சென்றவர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதுதான் படத்தின் அட்டகாசமான கதை. படத்தின் தலைப்பே அட்டகாசமான தற்குறிப்பேற்ற அணியாக வைத்துக் கலக்கியுள்ளார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. அதாவது இயல்பாய் நடக்கும் ஒரு விஷயத்திற்கு, கவிஞர் தன் கற்பனையை ஏற்றுவது ‘தன் குறிப்பு ஏற்றம்’ ஆகும். அதே போல், கிடாயை வெட்டச் சென்றவர்கள் கோயிலுக்கே போய்ச் சேராத கத...